Header Ads



அரசியல்வாதிகள் தமது சம்பளத்தை வழங்க வேண்டும்


பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்  அனைவரும், தங்களது ஒரு மாதச் சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டுமென முருத்துட்டுவே ஆனந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகப் பாராளுமன்ற சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் கைவைக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

முடிந்தால் சம்பளத்தை வழங்குங்கள் என்று தொழிலாளர்களுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும். மாறாக பலவந்தமாக தொழிலாளர்களின் சம்பளத்தைப் பெற முடியாது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கி முன்னுதாரணமாகச் செயற்பட்டால், ஏனையோரும் தங்களது சம்பளத்தை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

எமக்கு மக்கள் மத்தியில் சென்று நிதியை திரட்ட முடியும். எனினும் அதனை செய்வதற்கு இதுபொருத்தமான காலமல்ல எனவும், எனவே பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வழங்க வேண்டும் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்துவிட்டு, நாட்டிலிருந்து கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டுமென நாம் முன்பே கூறியிருந்தோம். நாம் கூறும் எதனையும் கேட்பதில்லை. ஜனாதிபதி அருகில் அவரை தறவாக வழிநடத்தக்கூடிய ஆலோசகர்களே இருக்கிறார்கள் எனவும் முருத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.