Header Ads



அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்


தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை செப்டம்பர் 06 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிற்துறைக்கு செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள இடங்களில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது என இராணுவத் தளபதி கூறினார்.

அத்தியாவசிய சேவைகள், விவசாயம், ஏற்றுமதித்துறை, ஆடை கைத்தொழில் உள்ளிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிலுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அமர்த்துமாறு நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.