Header Ads



ஒரு மாற்று மத சகோதரர், சோகம் தோய்ந்த முகத்துடன்


திங்கள் மாலை வைத்தியசாலையிலிருந்து, இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகர் நோக்கி ஜனாசா வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளை, 

ஒரு மாற்று மத சகோதரர், சோகம் தோய்ந்த முகத்துடன் வாகன சாரதியை அணுகி எனது உறவினரின் சடலத்தையும் அங்கு கொண்டு செல்ல வேண்டும், 

எங்களுக்கென்று ஒரு உதவியும் கிடையாது, கடவுளுக்காக இந்த உதவியை செய்யுங்கள் என்று மன்றாடுகிறார். ஒரு மய்யித்தை வைக்கக்கூடிய வாகனத்தில் ஏற்கனவே இரண்டு ஜனாசாக்கள் மூண்றாவதை வைக்க இடமோ, சம்பிரதாயமோ இடமளிக்காது என்பதை சூசகமாக தெரியப்படுத்துகிறார் சாரதி. 

ஐயா!”எங்கிட சவப்பெட்டிய கீழ வெச்சி, ஒங்குடய மேல வெச்சசாலும் பறவாயில்ல” என்ற ஏக்கக் குரலால் உடைந்து போன சாரதி செய்வதறியாது அவ்விடத்திலிருந்த ஜனாசா நலன்புரி அமைப்பின் தலைவருக்கு விடயத்தை  தெரியப்படுத்த, உடனடியாக அவர் தனது பிரத்தியேக வாகனத்தை அழைத்து இருக்கைகள் களட்டப்படு மாற்றுமத சகோதர்ரரின் பூத உடலும் மஜ்மா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அந்த சகோதரனின் ஆத்ம திருப்தியை அளக்க அளவுகோல் கிடையாது.மனிதம் வாழ்கின்றது. இது எமக்கெல்லாம் பெருமை, ஊரின் முன்மாதிரி.வல்ல நாயன் ஜனாசா நலன்புரி அமைப்பின் சேவைகளை அங்கீகரிக்கட்டும். ஆமீன்

Mohamed Sheriff Murshid

2 comments:

  1. மாஷா அல்லாஹ்.இஸ்லாம் மனித நேயத்தை போதிக்கிறது.அடுத்த வீட்டுக்காரர்,உதவி கேட்டு வருபவர்,வசதியற்றவர்களை தேடிச்சென்று உதவ கட்டளை இடுகிறது.அப்போதுதான் ஈடேற்றம் பெறமுடியும் என குர்ஆன் போதிக்கிறது.இந்த சகோதரர்களுக்கு நிச்சயம் நல்ல கூலியை இறைவன் வழங்குவானாக.

    ReplyDelete
  2. Alhamdulillah brother.யார் எதயாவது சொல்லிட்டு போகட்டும் நாங்க எங்கட அடையாளத்தே காப்பாற்ற தவறிடக்கூடாது.அல்லாஹ் ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தையோ அவனது செல்வ செழிப்பையோ பார்ப்பதில் அவனது உளத்தூய்மையைதான் பார்கிறான். உளத்தூய்மையாளனுக்கு இந்த உலக சுகங்கள் ஒரு தூசு க்கும் பெறுமதியில்லே.

    ReplyDelete

Powered by Blogger.