Header Ads



வீட்டுக்கு சென்று தடுப்பூசி வழங்கும், இராணுவத்தின் திட்டத்திற்கு பாராட்டு குவிகிறது


தற்போது யாழ்ப்பாணத்தில் வாழும் அவுஸ்திரேலியாவைச் அடிப்படையாக கொண்ட சுகாதார நிபுணரான வைத்தியர் உமாசுகி நடராஜா, குடாநாட்டில் நடந்து வரும் இராணுவ நடமாடும் தடுப்பூசி திட்டம் குறித்து தனது மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

“வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்க தீர்மானம் மேற்கொண்டமையை நான் மிகவும் பாராட்டுகிறேன். தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு செல்ல யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய வயதானவர்களுக்கு இது மிகவும் வசதியானது. இந்த திட்டம் ஊடாக வரிசையில் நிற்கும் தேவை இல்லாததால் தொற்று பரவும் விகிதங்களைத் குறைக்க உதவுகிறது. இது இராணுவத்தின் நட்பு அணுகுமுறை என்பதால் எங்கள் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கான ஒரு நல்ல உலகத்தையும் ஏற்படுத்தும். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் யாழ்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் யாழ் மாவட்டத்தின் கொவிட் 19 கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ் ஸ்ரீபவன் ஆகியோர் சில அரசு அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த , டாக்டர் ஸ்ரீபவன் இந்த முயற்சிக்கு இராணுவத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், மேலும் வயதானவர்கள் வைரஸ் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். 

இந்த தேசிய நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ண்ணக்கருவிற்கமைவாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் யாழ் மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் குடா நாடு எங்கும் முன்னெடுக்கப்பட்டது. 

இராணுவத்தின் இந்த ஏற்பாட்டிற்கும் ஒரு சில நாட்களில் குடா நாடு எங்கும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் ஆகியோருடன் இணைந்து வயதான மக்களுக்கு தடுப்பூசி வழங்கி நிறைவு செய்தமைக்காக சாதாரண குடிமக்கள் மற்றும் தடுப்பூசி பெற்றவர்கள் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவிக்கின்றனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

2 comments:

  1. Great job and the great teem only you can do it. really i have seen at dehewala.they did very respect with good program.and timings.

    ReplyDelete
  2. Great job and the great teem only you can do it. really i have seen at dehewala.they did very respect with good program.and timings.

    ReplyDelete

Powered by Blogger.