Header Ads



கொத்தலாவல சட்டமூலத்தை தற்போதைக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை: பின்வாங்கியது அரசாங்கம்


கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டியுள்ளதாக தாம் நம்புவதால், சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. திராட்சையைப் பறிப்பதற்கு தனது இயலாமை,திராட்சையின் மீது நரிக்கு உள்ள ஆசையும் பற்றும் எந்தவகையிலும் குறையமாட்டாது மட்டுமன்றி திராட்சையைக் கொய்யும் நரியின் நரித்திட்டங்களையும் நரி ஒருபோதும் கைவிடாது என்பதுதான் வரலாறு கற்றுத்தந்த பாடமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.