Header Ads



கொழும்பில் உள்ளவர்களின் அவசர கவனத்திற்கு


கொழும்பில் நிரந்தரமாக வசிப்போர் அல்லது வாடகைக்கு குடியிருப்போருக்கு மிக முக்கியமான அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இதுவரையிலும் ஒரு தடுப்பூசியையேனும் ஏற்றிக்கொள்ளாத, கொழும்பைச் சேர்ந்தவர்கள் ஏதாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“அவ்வாறனவர்கள், கொழும்பு சுகததாச உள்ளக அரங்குக்குச் சென்று, தப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இன்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் மாலை 4 மணிவரையிலும் முன்​னெடுக்கப்படும்.

சமூக பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர் என்றும் பொலிஸ்  ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசி வகைகளைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்காது, ஏதாவது ஒரு வ​கை தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.