Header Ads



எனது காலப்பகுதியில் முஸ்லிம் நாடுகளுடனான, இலங்கையின் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளேன் - பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் பு தைர் 2021 ஆகஸ்ட் 24ஆந்  திகதி சந்தித்தார்.

தூதுவர் தனது தொடக்க உரையில், குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர்  அல்-அஹமத் அல்-சபாவிடமிருந்தான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான குவைத் அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். குவைத் அரசாங்கம் சுகாதாரம் மற்றும் சக்திவளத் துறைகளில் இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

தூதுவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை அரசாங்கமும் குவைத்  அரசாங்கமும் மிகவும் நட்புறவான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், தனது காலப்பகுதியில் வளைகுடா நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். கோவிட்-19 அவசர சுகாதாரத் துறைத் தேவைகளுக்காக குவைத் செஞ்சிலுவை அமைப்பு வழங்கிய நன்கொடைகளுக்காக குவைத் அமீருக்கான இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய பல்தரப்பட்ட மன்றங்களில் குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மதிப்புமிக்க ஆதரவையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை எரிசக்தி, ஹோட்டல், சுற்றுலா மற்றும்  நகர்ப்புற வீட்டுத் திட்டங்கள் போன்ற பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் மேலும் விரிவுபடுத்துவது குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் ஆகிய இருவரும் கலந்துரையாடினர்.

சுற்றுலா, சுகாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் போன்ற இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய பகுதிகள் இன்னும்  ஆராயப்படாமல் உள்ளதாகவும், அவை இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே இருக்கும் நல்லுறவு உறவுகளை வலுப்படுத்துவதில் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட  அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இவ்வாறே ஏனைய முஸ்லிம் நாடுகளான கட்டார் மற்றும் பாகிஸ்தான் தூதர்களுடனும் அமைச்சர் சந்திப்புகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. ஆம் வெற யாரு உங்களுக்கு உதவுவாங்க நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் முஸ்லிம்களா பாத்து ஏதாவது தந்தாதான் இல்லன்டா வெற யாரும் தரமாட்டாங்க

    ReplyDelete
  2. எந்த ஒரு முஸ்லிம் நாடும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செல்லவும் பிச்சையும் கடனும் வழங்கவும் முன்வரமாட்டாது, அதற்கான உடனடிக்காரணம் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை உலகம் முழுவதும் எதிர்க்கும் போது சுட்டு எரித்தமையும் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு துரோகமும் அணுவணுவாக அந்த நாடுகளுக்கு எத்திவைக்கப்படுகின்றது. எனவே இந்த அரசாங்த்தின் எந்த ஒரு புள்ளியையும் முஸ்லிம் நாடுகள் அற்ப அளவும் மதிக்காது.

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்த இந்த காட்டுமிராண்டிகள் தான் முன்பு முஸ்லிமகளின் பள்ளிவாயல்களுக்கு நெருப்பூட்டினார்கள். இந்த படுபாவிகள் யாருக்கும் முஸ்லிம் நாடுகளின் பக்கமும் செல்லமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.