Header Ads



மங்கள எனக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கினார், நான் நன்றிக்கடன் பட்டவனாக உள்ளேன் - ஹலீம்


இறுதி மூச்சு வரை இன,மத நல்லிணக்கத்திற்காக அச்சமின்றி குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர்(கிங் மேக்கர்) மங்கள சமரவீர அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.

மங்கள சமரவீர அவர்களின் மறைவையொட்டி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுப்பான்மை மக்களின் உரிமையை பாதுகாக்க முன்னின்று செயற்பட்ட இலங்கை அரசியல்வாதிகளில் மறக்க முடியாதவரே மங்கள சமரவீரவாகும். முஸ்லிம்களின் ஜனாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்;தது மாத்திரமின்றி அதற்காக போராட்டத்திலும் களமிறங்கினார். அவரது உன்னத கொள்கையை எத்தகைய எதிர்ப்புகள் வந்த போதிலும் மாற்றாது அதே கொள்கையை கடைப்பிடித்தார்.சொல்ல வேண்டியதை வெளிப்படை சொல்ல அவர் மறுத்த சரித்திரம் இல்லை.

சிறுப்பான்மை மக்களின் உரிமை,சமத்துவத்திற்கு மாத்திரமின்றி ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தயங்காது குரல் கொடுத்தவராகும். மேலும் சிறந்த இராஜதந்திரியான மங்கள சமரவீர சர்வதேச அளவில் பல நாடுகளின் நெருங்கிய தொடர்புகளை தன்னகத்தே கொண்டவராகும்.

நிதி அமைச்சராக பதவி வகித்த போது கம் பெரலிய என்ற அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வீதி புனரமைப்பு, பாடசாலை அபிவிருத்தி திட்டங்கள், விகாரைகள்,மஸ்ஜீத் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு என பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அதிகளவான நிதிகளை ஒதுக்கீடு செய்தவர். ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றிற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து எனக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கினார். அதற்கு நான் அவருக்கு நன்றி கடன்ப்பட்டவனாக உள்ளேன்.

இதற்கு அப்பால் மங்கள சமரவீர என்பவர் சாதாரண அரசியல்வாதியல்ல. அவர் சிறந்த அரசியல் சாணக்கியன். அவர் அரசியல் தலைவர்களை உருவாக்கும் கிங் மேக்கராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். எனவே அவரின் இழப்பால்; வேதனை அடைந்துள்ள அவரது குடும்பத்தினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

1 comment:

  1. கடன்பட்டு, அவர் இறந்தபிறகா, கடன் பற்றிப் பேசுவது, சுகயீனமாக இருக்கும்போது நோய் விசாரிக்கப் போனீர்களா, காட்டில் பூத்த சைத்தான் போல திடீரென தோன்றி கடன் பற்றிப் பேசும் உங்களைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டதால் தான் யூஎன்பீ படுதோல்வி கண்டது.

    ReplyDelete

Powered by Blogger.