Header Ads



முஸ்லிம்களுக்கு உதவியாகவும், பக்கபலமாகவும் செயற்பட்டார் மங்கள் சமரவீர - ACJU விடுக்கும் அனுதாபச் செய்தி


முன்னாள் அமைச்சர் மங்கள் சமரவீர அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

நம் நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் வாதியுமான கௌரவ மங்கள சமரவீர அவர்கள் கொரானா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று மரணமடைந்தார்கள். அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

அன்னார் ஜனநாயக விழுமியங்களை பேணக்கூடியவராகவும் நடுநிலைப் போக்குடையவராகவும் காணப்பட்டதோடு, நம் நாட்டுக்காக அரசியில் ரீதியில் பாரிய பங்களிப்புகளை செய்த ஒருவருமாவார். மேலும், அவர் சிறுபான்மை மக்களை அரவணைத்து, அவர்களது அபிலாஷைகளை மதித்து, அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவருமாவார். 

குறிப்பாக, முஸ்லிம்களுடைய விடயங்களில் மிக கரிசணையுடன் அவர் செயற்பட்டதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது முஸ்லிம்களுக்கு உதவியாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டார். இவரது இந்த நற்பண்புகளையும் செயற்பாடுகளையும் முன்மாதிரியாக எடுத்து அரசியல்வாதிகள் செயற்படும் பட்சத்தில் நம் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முழு முஸ்லிம் சமூகம் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.  

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.