Header Ads



5 வயதிலிருந்து சிறுமி துஷ்பிரயோகம் என பொலிஸார் வாதம் - எனினும் சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்படவில்லை என சட்ட வைத்திய அதிகாரி கூறல்




15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவருக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்படவில்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்துக்கு வழங்கிய அறிக்கை, கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்காக ஆஜரான சட்டத்தரணியின் வாதங்களை கருத்திற்கொண்டே சந்தேகநபர்களான தந்தை, மகன் உள்ளிட்ட ஐவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ய குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணவரத்ன உத்தரவிட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மதுரங்கொட பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த மாதம் 21ஆம் திகதி 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய,வே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும், 5 வயதிலிருந்து 14 வயது வரையில் குறித்த சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தொடர்பில் ஆஜரான மதுரங்கொட பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர்.

எனினும் சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்படவில்லை என குருநாகல் போதனா வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி ஹேமந்த விக்ரமசிங்க நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்த நீதவான், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியையோ அல்லது சிறுமியின் குடும்பத்துக்கோ சந்தேநபர்கள் அழுத்தங்களை வழங்கினால், பிணை இரத்து செய்யப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.


No comments

Powered by Blogger.