Header Ads



பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி வேட்டை - வத்தளையில் பதுக்கப்பட்டிருந்த 5,000 டன் சீனி பிடிபட்டது


நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி அந்த அதிகார சபையினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபை சட்டத்தின் படி, சீனி இறக்குமதியாளர்களினால் தமது களஞ்சியசாலைகளை நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

சந்தையில் சீனி விலை அதிகரித்து செல்வதன் காரணமாக சில இறக்குமதியாளர்கள் சீனியினை பதுக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வத்தளை - மாபொல பகுதியில் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,000 டன் சீனி இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சீனியானது அதன் இறக்குமதியாளர்களினுடையது என தற்போது தெரியவந்துள்ளது.

அந்த களஞ்சியசாலை பதிவு செய்யப்படாதிருந்தமையினால் அதனை முத்திரையிடுவதற்கு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தற்போது சந்தையில் சீனிக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஒரு கிலோகிராம் சீனி 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

1 comment:

  1. சங்கலில்லா ஹோட்டல் உரிமையாளர் களவாடிய இலங்கை மக்களுக்குச் சொந்தமான 12 பில்லியன் ரூபாவுக்கு மேல் வரிமோசடி பதுக்கிய 20000 டொன் சீனியும் கொழும்பில் தான் இருக்கின்றது. அதைக் கைப்பற்றி பொதுமக்களுக்கு கிலோ 50ரூபாவுக்கு சீனி வழங்கலாமே.

    ReplyDelete

Powered by Blogger.