Header Ads



பெரியமுல்லையில் 5 நாட்களில் 5 கொரோனா வபாத் சம்பவங்கள் - தொற்றுடன் நிறையப்பேர் சமூகத்தில் நடமாடுவதாக கவலை


- Ismathul Rahuman -

இப் பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கும் தொற்று. தொற்றாளர்கள் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் என அச்சம்

நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் புது வருட கொத்தனிக்குப் பின் கொரோனாவினால் 16 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 8 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

பெரியமுல்லை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கும் நேற்று கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

பெரியமுல்லை பிரதேசத்தில் கொரோனா அறிகுரி உள்ளவர்கள் நிரையப்பேர் சமூகத்தில் உளாவுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். தனியார் வைத்தியர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் கணிசமான வர்களிடம் கோவிட் 19 வைரஸ் அறிகுறிகள் தென்படுவதாக கூறும் டாக்டர்கள் அவர்களை வைத்திய சாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினாலும் அங்கு செல்லுவதற்கு அஞ்சுவதாகவும் "எண்டிஞன்" அல்லது பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கூறினாலும் அதற்கும் பெரும்பாலானவர்கள் இணங்குவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதனால் சமூகத்தில் பெருவாரியான தொற்றாளர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த நாட்களாக தொடராக பல இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே வருபவர்கள் சமூக இடைவெளியை பேனுவதாக தெரியவில்லை. முண்டி அடித்துக்கொண்டு  முன்செல்லவே முனைகின்றனர்.

தடுப்பூசி ஏற்றுவதில் மும்முரமாக ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகரே கொரோனா தொற்றுக்கு ஆலாகியுள்ளார்.

மக்கள் இவற்றை கவணத்தில் எடுத்து செயல்பட வேண்டும்.

கொரோனா தொற்றால் மரணமானவர்கள் 16 பேர்களில் கடந்த ஐந்து நாட்களில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 15 பேர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து ஓட்டமாவடிக்கு அணுப்பப்படும் மரணங்களின் எண்ணிக்கை நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவினருக்கு அறிவிக்கப்படுவதில்லையென நீர்கொழும்பு சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.இதனால் மரணமடைந்தவர்களின் வீடுகளை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

கொரோனா தீவிரமாக பரவும் இக்காலகட்டத்தில் மக்கள் சொல்லப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதுடன் காயச்சல்,தடிமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் தாமதிக்காமல் சிகிச்சையை பெற்று வைத்திய உபதேசத்திற்கு அமைய நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments

Powered by Blogger.