Header Ads



நாட்டில் இன்றையதினம் 4,282 பேருக்கு கொரோனா தொற்று - நேற்று 183 பேர் மரணம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769  பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 40,733 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 183 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,366 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 183 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது. 


No comments

Powered by Blogger.