Header Ads



ஹிஷாலினியின் குடும்பத்திற்கு வீடும், 2 சகோதரிகளுக்கு சுயதொழில் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர்



“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தின் பிரகாரம், தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள், ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணமடைந்த சிறுமிக்காக வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்கவும் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தவும், இரண்டு சகோதரிகளுக்கும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். 

சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைப் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார். 


2 comments:

  1. அந்த அப்பாவிப் பிள்ளையின் குடும்பத்துக்கான வீடு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் கட்டிக் கொடுத்து செவ்வாய்க்கிழமை அவர்கள் புதிய வீட்டுக்குக் குடியேறுவார்கள் என்ற போலியாக படு பொய்யைக்கூறி அந்த அப்பாவிக்குடும்பத்தை ஏமாற்ற வேண்டாம் என அந்தக்குடும்பம் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  2. Goverment did master mind game for Isaliny murder case.

    ReplyDelete

Powered by Blogger.