August 22, 2021

இன்று 2000 தை கடந்தது மஜ்மா நகரில் கொரோனா மரணங்கள் - இன்று 38 ஜனாஸாக்கள் நல்லடக்கம்


- நஜிமிலாஹி - 

மொத்தமாக 2018 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (22.08.2021) 38 முஸ்லிம் ஜனாஸாக்கள்  மஜ்மா நகரில் அடக்கம் 

செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்குத் தெரிவித்தார்.   

இதன்படி 1857 ஆக முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 34 கிறிஸ்தவ மரணங்களும் 78 இந்து மரணங்களும் 49 பௌத்த மரணங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு  இந்திய பிரஜையின் இந்து மரணமும் சூடான் நாட்டைச்சேர்ந்த ஒரு முஸ்லிமின் ஜனாஸா அடங்களாக 02 வெளிநாட்டு மரணங்களும் மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment