Header Ads



20 க்கு ஆதரவளித்த தௌபீக், தேசிய அமைப்பாளராக பதவி உயர்வு


20 க்கு ஆதரவளித்த எம்பிக்களை சாடிக்கொண்டு கட்சியின் உயர் பதவிகளில் ஒன்றான தேசிய அமைப்பாளரை குறிவைத்து காய் நகர்த்திய சகோ. தவம், சகோ. ஜெமீல், சகோ. ஆரிப் ஆகியோரின் முயற்சிகள் வீணாக்கப்பட்டு 20க்கு ஆதரவாக பலமாக கைகளை உயர்த்திய திருமலை மாவட்ட எம்.பியும் கட்சியின் முன்னாள் பிரதி தவிசாளருமான எம். எஸ். தௌஃபீக் அவர்களை தேசிய அமைப்பாளராக பதவியுயர்த்தி அரசியலில் சாணக்கியத்தன்மையும், அரசியல் முதிர்ச்சியும் கொண்ட ஒருவராக தன்னை இன்று வெளிக்காட்டியுள்ளார் மு.கா தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள். 

20க்கு ஆதரவளித்த பிரதித்தலைவர்களான ஹரீஸ், நஸீர் அஹமட், பொருளாளர் பைசால் காஸிம், பிரதி தவிசாளர் தௌஃபீக் ஆகியோரை கட்சி பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் என்று சகோ. தவம் போன்றோர்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பிரதிதவிசாளராக இருந்த எம். எஸ்.தௌஃபீக் அவர்களை தேசிய அமைப்பாளராக பதவி உயர்த்தி 20க்கு கையுயர்த்தியவர்களை பலப்படுத்தும் பணியை வெற்றிகரமாக செய்து தேசிய அரசியலில் எம்.பிக்களின் தேவைகளை பற்றி  மு.கா தலைமைத்துவம் சகோ. தவம் போன்றோருக்கு அரசியலின் அத்தியாயங்கள் சிலதை கற்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். 

தேசிய அரசியலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் கடுமையான நெருக்குதல்களை அனுபவித்து வரும் இந்த காலகட்டத்தில் 20க்கு ஆதரவளித்து அரசுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்கும் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு எதார்த்த அரசியலை செய்ய துணிந்திருக்கும் மு.கா தலைவரின் இந்த முயற்சி அரசியல் அரங்கிலும், மு.கா ஆதரவாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 20கு கையுயர்த்திய இவர்களை பலப்படுத்தி சமூகத்தையும், கட்சியையும் பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் அவர்கள். 

இதனால் "இலவு காத்த" கிளியாக பெரும் ஆசை கொண்டிருந்த சிலர் மு.கா தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க தயாராகி இப்போது விமர்சனத்தின் முதல் பகுதியை ஆரம்பிக்கின்றனர் என்பது  இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  இலங்கை அரசியலின் போக்கை சரியாக கணித்து காய் நகர்த்திய 20க்கு ஆதரவளித்தவர்களின் பின்னணி என்ன? தலைமைத்துவ ஆளுமை என்ன? மு.கா பயணிக்கும் பாதையின் திசை என்ன என்பதை மு.காவுக்கு புதியவர்களான சகோ. தவம் போன்றோர்களை விட அடிப்படை போராளிகள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே இன்றைய சம்பவத்தின் நிழல் காட்டுகிறது. 

இனியென்ன அடுத்த அத்தியாயம் மு.கா தலைவர் ஹக்கீமை நோக்கி நகரும். 

கிழக்கு அரசியல் ஆய்வு மையம்

2 comments:

  1. Centre for Eastern Political Studies

    Gentlemen,

    It is Very HARD to agree with you. No sane person, with any knowledge of the current political situation in the country, will agree with you.

    If you guys think that the salvation of the Muslims in this country, whether in the East or elsewhere depends on currying favours from this Govt., you are sadly mistaken. Can you point out one good thing that emerged for the community by the support that the Muslim MPs gave to 20A and also their recent voting against the No confidence Motion against Gammanpila? All they have demonstrated is that they will do anything to support the Govt. for some cheap PERSONAL Benefits, never mind the Adverse Publicity that befalls the Entire Community due to such Unprincipled Actions of these Unscrupulous, Deceitful, Absolutely Corrupt MPs.

    These 20A guys, could NOT even make the Govt. change its policy on the Cremation of Covid-19 victims either before they voted for 20A or even immediately after that. More so, when Forced Cremation itself was Deliberate Violation of our Fundamental Rights, as the reason adduced for Cremation was NOT based on any Valid Scientific Reasoning or WHO Recommendation. No country in the world Disallowed Burial of Covid 19 victims other than Sri Lanka. Obviously, it was a Deliberate Policy aimed at Humiliating and Penalysing the Muslims. Why couldn't your 20A heroes take it up strongly with the Govt. and Force the Govt. to change its Policy? Thanks to Imran Khan's visit, the Govt. allowed Burial in February last WITHOUT changing its Ill-conceived reasoning for Cremation.

    Now, 5 months after Burial was allowed, The Burial can take place ONLY in one place viz. in Ottamawadi in the East. Why NOT other places in the rest of the country? Why should Grieving family members of the deceased in other distant parts of the country, suffer the pangs of long travel to observe the last rites of their Near and Dear ones? Even for those living in places like Pottuwil or Trincomalee in the East, travelling to Ottamawadi for Burial can be a nightmare.

    You guys are obviously cheap propagandists for these Crooked 20A MPs. Here is a Challenge for you.

    Can you get these 20A MPs to get the Govt. to follow WHO Guidelines and the rest of the world so that the Muslims can Bury the Covid 19 victims wherever they live without the Torturous Hassle they have been Forced to undergo for 16 months now.

    As for Rauf Hakeem backing these 20A MPs, it seems that he is on course to end his political career Sooner than Later.

    ReplyDelete
  2. அரசியல் சுழியோட்டங்கள் தெரியாவிட்டால் ரிஷாட்டும் அவர் சார்ந்தவர்களும் படும் அவதியை அனுபவிக்க நேரிடும்.

    ReplyDelete

Powered by Blogger.