Header Ads



எனது 2 மாத சம்பளங்களை, கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் - இஷாக் Mp


தனது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதோடு, உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றை தடுக்கும் வகையில் அரசு தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நாட்டின் நிலைமையினை கருத்திற்கொண்டு மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வதில் அக்கறையோடு செயல்படவேண்டும்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது, ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருப்பது, அத்தியவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்வது போன்ற சுய பாதுகாப்பு விடயத்தில் மக்கள் மிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. பாதைகள் வழியாக வரும் பல இலட்சம் ரூபாய் மரந்து இரண்டு மாத சம்பளம் கொரோனாக்காக... புரியாத மக்களுக்கு இது புதிர்....ஆட்சியோடு நீங்கள் இல்லை என்றால் டங்குவார் தான் சகோதரா....

    ReplyDelete
  2. மற்றவர்களைப் போல் இந்த சோனக பா.உ.தங்கள் சம்பளத்தை கோவிட் நிதிக்கு அன்பளிப்புச் செய்த செய்தியைப் பகிரங்கப்படுத்துவதன் நோக்கம் அதற்கான கூலியை அல்லாஹ்வை விட்டு 20க்கு ஆதரவுவழங்கிய பாவத்துக்குப் பரிகாரமாக இந்த நாட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரும் வௌிப்பாடா அது என்பது புரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.