Header Ads



உறங்கிக் கொண்டிருந்த 121 அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதப் புலிகள் சுட்டும், வெட்டியும், குத்தியும், தீயிட்டும் படுகொலை செய்த தினம் இன்று


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

1990ஆம் ஆண்டு ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் ஒரே இரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குலினால் படுகொலை செய்யப்பட்ட 121 பேரின் நினைவாக  31வது நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு படுகொலை செய்யப்பட்டவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள காட்டுப்பள்ளிவாசலில் வியாழக்கிழமை அதிகாலை 12.08.2021 இடம்பெற்றது.

இம்முறையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஏறாவூர் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ{ஹதாக்கள் (சொர்க்கவாசிகள்) பிரார்த்தனை நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் படுகொலை நிகழ்வின்போது காயமடைந்து சுகமடைந்தவர்கள் மார்க்க அறிஞர்கள் சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் ஊர்ப்பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டதாக பேரவையின் தலைவர் எம்.எல். அப்துல் லத்திப் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு ஏறாவூரிலும் ஏறாவூரைச் சூழவுள்ள ஆற்றங்கரை ஓட்டுப்பள்ளி புன்னைக்குடாவீதி ஐயங்கேணி மீராகேணி சத்தாம்ஹ{ஸைன் ஆகிய கிராமங்களிலும் நள்ளிரவு வேளையில் தூக்கத்திலிருந்த நிலையில் 121 முஸ்லிம்கள் சுட்டும் வெட்டியும் குத்தியும் தீயிட்டும் அடித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் மேலும் சுமார் 200 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும்  பிரார்த்தனை நிகழ்வு வருடாவருடம் இடம்பெற்றுவருகின்றது.

1 comment:

  1. திரும்பத் திரும்ப கருணா அம்மான் தன்னை மாபெரும் வீரன் என்று தனக்குத்தானே கூறிக் கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும். அரந்தலாவ சம்பவத்திலும் தலைவர் அவரகள் தமது வீரத்தன்மையை வெளிப்படை;யாக காட்டியுள்ளதும் வரவேற்கத்தக்கது. இவற்றைப் பாராட்டித்தான் மாறி-மாறி வரும் அரசாங்கங்கள் இவரை மரியாதைப்படுத்துமுகமாக பதவிகளை வழங்கி கண்ணியப்படுத்துவதும் வரவேற்கத்தது.

    ReplyDelete

Powered by Blogger.