Header Ads



கொழும்பில் 100 சதவீதம் டெல்டா பரவியுள்ளது - பேராசிரியர் சந்திம


கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு 100 சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவேந்திர அறிவித்தார் 

இந்நிலையில், இலங்கையில் "சுப்பர் டெல்டா" பிறழ்வு பரவியுள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் 

எனினும், தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் வேகம்  அதிகரித்துள்ளது என்பதால், செப்டெம்பர் மாதமளவில் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும்  என நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, டெல்டா பிறழ்வு நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் 

No comments

Powered by Blogger.