Header Ads



அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமலா அல்லது பசிலா என்பதல்ல பிரச்சினை - இம்தியாஸ் Mp


எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற இன்றைய (01) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்.

இன்று ஷானி அபேயசேகர தனது 35 வருட சேவையிலிருந்து ஒய்வு பெற்று செல்கிறார்.இலங்கையின் பொலிஸ் சேவைக்கு மகத்தான பங்களிப்பைச் செய்து குற்றவியல் துறைக்கு கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்த சிறந்த அதிகாரி.அவருடைய ஒய்வு வாழ்விற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இன்றைய ஊடக சந்திப்பை ஆரம்பிக்க நினைக்கிறேன். நேற்று அவருடைய பிறந்த நாள்.இன்று வரும் போது அவருடைய உயிருக்கு ஆபத்துள்ளதான ஓர் செய்தி ஒன்றை கேள்விப்பட்டேன்.நாட்டின் தற்போதுள்ள சட்டம் மற்றும் ஒழுங்குகள் குறித்து இங்கு தீர்வுகளை முன்வைக்க நான் விரும்பவில்லை.அது குறித்த தீர்வுகளை வழங்கும் பெறுப்பை மக்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். 

ஐக்கிய மக்கள் சக்தி ஒர் புதிய அரசியல் எமது கட்சியின் பிரதான இலக்கு எனக்கு பின்னாலுள்ள திறையில் காண்பிக்கப்படுகிறது.அது தான் மக்களுக்கான எதிர்க்கட்சியாகும்.சம்பிரதாய எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கப்பால் அர்ப்ப நோக்குகளுக்கு அப்பால் செயற்படுவதற்கு எமது கட்சியின் முன்னோடிகள் தீர்மானித்துள்ளனர்.எமது முதலாவது இலக்கு நாடாகும்,மக்களாகும்.ரோசாப்பூக்களைக் கொண்ட காலம் அல்ல எமது நாட்டின் எதிர்காலம்,மாறாக கடினமான எதிர்காலம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளோம்.ஐக்கிய மக்கள் சக்தி இந் நாட்டிலுள்ள பல புத்திஜீவிகள்,துறை சார்ந்தவர்கள்,தொழில்வள்ளுநர்கள்,இலங்கையை பிறப்பிடமாகக்  கொண்ட வெளிநாட்டு பூத்திஜீவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பல குழுக்களை அமைத்துள்ளோம்.விருப்பமுள்ள ஆர்வமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி ஒன்று கூடி பல் வேறு பரப்புகள் குறித்து விழிப்பாக இருப்பதோடு எதிர்காலத்தி்ல் ஆட்சியமைக்கவுள்ள பிரதான எதிர்க்கட்சியாக பல்வேறு மாற்றீடுகள் பற்றியும் கலந்தாலோசித்து வருகிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதய கம்பன்பில,பசில் போன்றவர்களின் நாடகங்களை அரங்கேற்றி மக்களை மீண்டும் ஏமாற்றுவது சாத்தியமில்லை.மக்களுக்கு இன்றைய பிரதான பிரச்சிணை அடுத்த ஜனாதிபதி தோர்தலில் வேட்பாளர் நாமலா அல்லது பசிலா என்பதல்ல.மக்களின் பிரச்சிணைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கத்திடம் இயலுமையுள்ளதாக நான் நினைக்கவில்லை.பெருட்களின் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தவன்னமுள்ளது,மக்களிடம் பணம் இல்லை,வேலை இழப்புகள் இடம் பெறுகின்றன,சம்பளம் குறைக்கப்டுகிறது,நாளாந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் வீட்டில்,பிள்ளைகளுக்கு உணவளிக்க வசதிகள் இல்லை,வங்கிகளில் பெற்ற கடண்களை மீள அடைக்க முடியாத நிலை,வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இந் நாட்டுப் பெண்கள் அடகுக் கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்,இவற்றுக்கு மத்தியில் உயர்ந்த வட்டி வீதத்தில் பெற்ற கடண்களால் அமைக்கப்ட்ட மத்தளை விமான நிலையம்,ஹம்பந்தோட்டை துறைமுகம்,நெலும் குலுன என்பன நாட்டுற்கு சுமையாக மாறியுள்ளது.இவற்றுக்கான கடண்களை அடைக்க எங்களிடம் அந்நியசெலாவணி கையிருப்பு போதுமானதாக இல்லை.ஆகையால் இறக்குமதிகளை மட்டுப்படுத்த இந்த அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ளது.

கோவிட்டின் ஆபத்துகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முதலில் பேசியபோது, ​​அவர் அவமதிக்கப்பட்டார். இன்று அனைத்தும் உன்மை என நிறைவேறியுள்ளன. அப்போது ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு ஓர் இளைஞனாக பல்வேறு பிரயர்ரதனங்களை மேற்கொண்டோம்.அப்போதைய நிலையில் பிரேமதாச போன்றவர்கள் ஜனாதிபதியாக ஆகுவது நினைத்துப் பார்க்க முடியாத ஓர் சந்தர்ப்பமாகும்.ஆனால் அன்று. வெற்றி பெற்றோம்.சஜித் பிரேமதாச ஒரு பெரிய முயற்சியை செய்து வருகிறார். அவரைச் சுற்றி திறமையானவர்கள் உள்ளனர்.  இந்த அரசாங்கம் அதன் பிரச்சினைகளுக்கு பதில்கள் இல்லாததால் அடக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.