Header Ads



அக்குறனை மாம் பிஸ்கட் நிறுவனத்தின் தலைவர், அல்ஹாஜ் G.N.M.M. பளீல் காலமானார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அக்குறனை மாம் பிஸ்கட் நிறுவனத்தின் தலைவர் பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் G.N.M.M. பளீல் மறைவு அதிர்ச்சியும்  கவலைக்குரியதுமான  செய்தியாகும்.

தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்து இருக்கும் மாம் நிறுவனத்தின் வளர்ச்சி சிறிய ஒரு நிறுவனம் பாரிய ஓர் வியாபார நிறுவனமாக எவ்வாறு வளரலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் ஆகும்.இதன் வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு அளப்பரியது எனலாம்.

இனிமையாக பழகக் கூடிய அவர் எந்தநேரமும் சிரித்த முகத்துடனேயே ஏனையோரிடமும் உறவாடுவார். மிக நீண்ட காலமாக எனக்கு அவருடன்  நட்பு இருந்தது..சிறிய விடயம் ஒன்று என்றாலும் காரியாலயத்துக்கு நேரில் வந்து முறையாக நிவர்த்தி செய்து கொண்டு செல்வார்.சமூக சேவையிலும் அவர் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டவராக இருந்தது மட்டுமல்லாமல் அக்குறணை ISS நிறுவனத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமல்லாமல் அதன் தலைவராகவும் செயலாற்றினார். கொரோனா நமக்கு தொடர்ந்தும் அதிர்ச்சி தரும் செய்திகளையே தந்து கொண்டிருக்கிறது.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அல்லாஹுத்தஆலா அளிக்க வேண்டும் என பிரார்த்னை செய்கிறேன்.

சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட்-


No comments

Powered by Blogger.