Header Ads



மஹிந்தவிடமிருந்து பறித்து பசிலுக்கு, நிதி அமைச்சு வழங்கப்படவில்லை - பொதுஜன பெரமுன


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நிதி அமைச்சுப் பறிக்கப்பட்டு, பசிலுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துத் தவறென தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், ராஜபக்ஷக்களிடையில் முரண்பாடுகளை உருவாக்க எதிர்க்கட்சியினர் இதுபோன்ற கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ள சாகர காரியவசம், புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படுமென எவராவது கூறியிருந்தால், அது அரசியலுக்காகத் தெரிவிக்கப்பட்டக் கருத்து எனவும், எரிபொருள் விலையை குறைப்பதற்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதன் விலையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்த நிதி அமைச்சு பறிக்கப்பட்டு, பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கதை ஒன்றை உருவாக்கி, கட்சித் தலைவர்களிடம் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ திறமையானவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சிறந்தமுறையில் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பார் என்பதாலேயே அவருக்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. மாறாக பிரதமரிடமிருந்து நிதி அமைச்சுப் பறிக்கப்பட்டு பசிலுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.