Header Ads



மின்சாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை - இன்று தொழிற்சங்க பேச்சு


இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, கெரவலபிட்டியில் உள்ள மின்னுற்பத்தி மையத்தின் 40 சதவீத உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பல்வேறு விடயங்களை முன்வைத்து மின்சார சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.

இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. நாடு முழுவதனையும் அமெரிக்காவிற்கோ அல்லது சீனாவிற்கோ விற்றுவிட்டால் பரவாயிலலைபோல்த் தெரிகின்றது. நாமும் அமெரிக்க அல்லது சீன குடிபதிகளாக மாறிவிடுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.