Header Ads



ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் இன்னும் வேகம் தேவை, ஓரிருவரைக் கைதுசெய்தால் போதாது - ரஞ்சித் மெல்கம்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட  ஆணைக்குழு அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, 7 ஆயர்களால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நேற்று (13) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த பேராயர் ரஞ்சித் மெல்கம், அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

“எம்மைப் பொறுத்தவரை இதுதொடர்பான விசாரணைகளில் இன்னும் வேகம் தேவைப்படுகின்றது” என்றார்.

கொழும்பில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,   இந்த விசாரணையை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும். ஓரிருவரைக் கைதுசெய்து, நீதிமன்றுக்கு அழைத்து வந்து, இந்த விசாரணைகள் முடிவுற்றதாகக் கூறி அதனை காபட்டுக்கு அடியில் போடும் செயலை செய்ய வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டார்.

“இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை திருப்திபடுத்த முடியாது. அவ்வாறு திருப்திபடுத்த அரசாங்கமோ அல்லது விசாரணைகளை முன்னெடுக்கும் திணைக்க​ளங்களோ நினைத்தால் அது தன்னைத் தானோ ஏமாற்றிக்​கொள்ளும் செயலாகும்” என்றார்.

தாக்குதல் தொடர்பான நிலைமை நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் தடையாக இருந்ததாக நாம் கருதியதால், இது குறித்து அனைத்து அ​ரசியல் கட்சிகளிடமும் கூறினோம்.  இந்த விசாரணைகளை இன்று வரையிலும் திருப்திப்படுத்தும் வகையில் நடக்கிறது என அக்கட்சிகளின் தலைவர்களால்  கூறமுடியாது எனத் தெரிவித்த அவர்,  எனவே, நாம் இந்தப் போராட்டத்தை இத்துடன் முடிக்கப் போவதில்லை என்றார்.

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களால் எவ்வித பயனுமில்லை எனத் தெரிவித்த அவர்,  இந்நாட்டில் கண்முன்னே தெரிவதை விட கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் விடயங்கள் குறித்து சரியான தெளிவு நாட்டின் தலைவர் மற்றும் நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு ஏற்படும் வரை நாம் நெருப்பின் மேல் இருக்கும் மக்களாகவே இருப்போம்.

“இந்த சம்பவத்தின் பின்னால் மறைந்துள்ள இரகசிய விடயங்கள் என்னவென்று விசாரணை செய்ய வேண்டும்” என்றார்.

 தற்போது அரசியல் தலைமைத்துவத்துக்கு ஏற்றவகையில் செயற்படும் பொலிஸாரும் அரசியல் தலைமைத்துவ நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படும் குற்ற விசாரணை திணைக்களமும் அரசியல் தலைமைத்துவத்தில் தலையிட்டு கட்டுபடுத்த முயற்சிக்கும் சட்ட கட்டமைப்பும் சட்டத்தை செயற்படுத்துபவர்களும் இந்த சம்பவத்தின் பின்னனி குறித்து ஆராய வேண்டும். எதிர்கால பாதுகாப்பை கவனத்தில் எடுத்து ஆழமான விசாரணை நடத்த வேண்டும் என்றார். TM


No comments

Powered by Blogger.