Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக பசிலை நியமிக்க முடியாது - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கை


பசில்ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரசமைப்பின் 99 ஏபிரிவின் படி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படக்கூடியவர்கள் என 2020 நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்ட பட்டியலில் பசில்ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை பசில் ராஜபக்ச இழந்தார் என்பதை கருத்தில்கொள்ளும்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமைஅதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான இடத்திற்கு பசில் ராஜபக்சவை நியமித்துள்ளமை மக்களின் இறைமையை குறைத்துமதிப்பிடுகின்ற நடவடிக்கை அரசமைப்பினை மீறும் செயல் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம்  தெரிவித்துள்ளது.

மாவட்ட நியமன பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது குறிப்பிட்ட கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவரையே அரசமைப்பின்படி வெற்றிடத்திற்கு நியமிக்கமுடியும் என்பதே தனது நிலைப்பாடு என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தேர்தலில் கட்சியொருவரால் நியமிக்கப்படாத ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது மக்களின் இறையாண்மையாகயிருக்கும் வாக்களிப்பு உரிமையை மீறும் செயல் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. எது எப்படியோ ;
    நிறைவேற்று ஜனாதிபதி முறையில் இது நடக்கிறது என கருதுகிறேன்.

    ReplyDelete
  2. நிறைவேற்று ஜனாதிபதி அதிகார சட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்படுகிறது என கருதலாம்.

    ReplyDelete

Powered by Blogger.