Header Ads



வங்கிகளில் உள்ள பலர் இணைந்து டொலர் மோசடி - திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் அமைச்சர்களுக்கு பசில் கோரிக்கை



திறைசேரி இருந்து மேலதிக நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவு றுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் வழங்கியமையால், புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எனவே தற்போதுள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி சேவைகளை முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வருமானம் சரிந்துள்ளன, ஆனால் அதை நிர்வகிக்க முடியும் என்றார்.

இதற்கு முன்னர் வெளிநாட்டு வருமானம் 1.2 பில்லியன் டொலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இருந்தாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி மற்றும் தனியார் வங்கிகளின் பலர் ஒன்றாக இணைந்து டொலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு டாலர் கறுப்புச் சந்தையின் விலை 235 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு சந்தையில் டொலர் ஒன்றின் விலை 235 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், அரிசியின் விலையை சுமார் 20 ரூபாவால் குறைக்க முடியும் என்றாலும், சில தொழிலதிபர்கள் அரிசியிலிருந்து பெரும் லாபம் ஈட்டிக்கொள்ளுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.