Header Ads



அதிகளவு தோல்விகளை சந்தித்த அணியாக, இலங்கை உலக சாதனை படைத்தது


இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 

போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. 

பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. 

நேற்றைய போட்டி தோல்வியுடன் இலங்கை அணி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

அதனடிப்படையில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகளவான தோல்விகளை சந்தித்த அணியாக இலங்கை அணி பதிவாகியுள்ளது. 

860 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள இலங்கை அணி அதில் 428 தோல்விகளை சந்தித்துள்ளது. 

இதற்கு முன்னர் 993 போட்டிகளை இந்தியா அணி 427 தோல்விகளை சந்தித்து முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.