July 03, 2021

சஜித்தை சந்தித்த அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் - 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' க்கு ஆதரவு நல்குவதாக தெரிவிப்பு


இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றதோடு, கடுமையான பேரழிவாக மாறியுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்தும் இரு தரப்பினராலும்  கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததோடு,உயர் ஸ்தானிகர் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தினார். அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியால் செயற்படுத்தப்படுத்தப்பட்டு வரும் "எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு" திட்டத்திற்கு அமைவாக  மருத்துவமனை உபகரணங்களை வழங்கும் திட்டத்திற்கும் தேவையான ஆதரவையும் வழங்க உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.

ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக  இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீடித்ததோடு ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஏழு தசாப்தங்களுக்கும் மேலான உறவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


0 கருத்துரைகள்:

Post a Comment