Header Ads



ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தூக்கிச்சென்ற பொலிஸார்


கொத்தலாவலதேசிய பாதுகாப்பு பல்கலைழகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் அதிகமானவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சட்டமூலம் பல்கலைகழக தனியார் மயப்படுத்துவதற்கும் உயர்கல்வியை இராணுவமயப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என அரசியல் கட்சியினரும் சிவில் சமூகத்தினரும் தொழிற்சங்கத்தினரும் அச்சம் வெளியிட்டுவருகின்றனர்.

தற்போது சேர் ஜோன்கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைகழகம் பாதுகாப்பு தரப்பினரிற்கு மாத்திரம் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

எனினும் இந்த சட்டமூலம்நிறைவேற்றப்பட்டால் பல்கலைழகம் பட்டங்களை வழங்கும் நிலையும்,கட்டணங்களை அறவிடும் நிலையும்- பல்கலைகழகம் பொருத்தமானது என கருதும் வர்த்தகத்தில் முதலீடு செய்யும் நிலையும் உருவாகும்,

மேலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கான நிலையும் புதிய மாணவர்களிற்கான அடிப்படை கல்விதராதரத்தை நிர்ணயிப்பதற்கான தகுதியும் கல்விதராதரத்தை பேணுவதற்கான - வெளிநாட்டு - தனியார் பல்கலைகழகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான அனுமதியும் சேர் ஜோன்கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்திற்கு கிடைக்கும்.

மேலும் இந்த சட்டமூலம் நிர்வாகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருகின்றது.

இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் துணைவேந்தராக அல்லது தலைமை அதிகாரியாக செயற்படுவார்.

இந்நிலையிலேயே அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் சிவில் சமூகத்தினரும் இன்று பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவேளை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் ஜோசப்ஸ்டாலின் உட்பட பலர் கைதுசெய்ய்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.