Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கமைய, ஒரேயொரு குர்ஆன் மொழிபெயர்ப்பை (தர்ஜமா) பயன்படுத்த திட்டம்


சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல்வேறு அல்-குர்ஆன்  மொழியெர்ப்புக்கள் காணப்படுவதால் குர்ஆன் சொல்ல வருகின்ற கருத்துக்களை பிழையாக விளங்கவும் விளக்கவும் வழிவகுக்கிறது.  அந்த வகையில் ஒரு மத்திய குழுவின் கண்காணிப்பில் ஒரு மொழிபெயர்ப்பு பொதுமக்கள் பாவனைக்காக பதிக்கப்படல் வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைககப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானது ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு என்பதாகும். 

மூன்று மொழிகளிலும் இலங்கையில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் வரையில், எந்த தர்ஜமா பாவிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும், இலங்கையில் வெளியிடப்படும் தர்ஜமாவுக்கான ஏற்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் உலமாக்களதும் அமைப்புகளதும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதம் மூலம் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, ஷரிஆ கவுன்சில், தேசிய ஷூரா கவுன்சில், SCOT ஆகிய அமைப்புகளின் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டுள்ளன.

இது பற்றிய அப்பிராயங்களை நேரடியாக director@muslimaffairs.gov.lk என்ற ஈமெய்லுக்கு 05.07.2021 க்கு முன்னதாக அனுப்பி வைக்கவும்.

ஏ.பீ.எம்.அஷ்ரப்

பணிப்பாளர், 

முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்களம்.

02.07.2021


3 comments:

  1. Is this controll measure of translation limited to Quran only? What about other religious books 📚, All around the world almost all religious books have got different translations.. if rule is to be applied ,do so in general to all.

    It seems with the invasion of China, Srilankan Muslims are step by step going to face the same fate as vygor Muslims.

    All the oppression and controll measures are toward muslims only.

    MUSLIMS Marriage laws out
    Qazi system out
    Niqaab is out
    Now keeping hand on Quran

    WE LOVE TO LIVE IN PEACE WITH ALL,,,

    ALLAH IS ENOUGH FOR US, LET THE KUFFARS AND MUNAFIQS KNOW...

    ReplyDelete
  2. தூய இஸ்லாத்தை ஐயம் திரிபட தூய வடிவில் எடுத்துரைக்கும் நம்பர் 01 இயக்கங்களின் கருத்தை மாத்திரம் கோரியிருப்பது நல்லது தான். Cultural department ப் பார்த்து சிரிப்பதா அழுவதா?? பரிதாபம்.

    ReplyDelete
  3. இந்த தலைப்பு மிக விரிவான ஆழமான தலைப்பாகும்.இதனை ஒருசிலர் மாத்திரம் ஆய்வு செய்வது இறுதியில் நிச்சியம் அவசியமான முடிவைக் கொடுக்கமாட்டாது. முஸ்லிம் கலாசார திணைக்களம் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் மார்க்கம் உற்பட சகல துறைகளிலும் துறைபோன அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் இந்த தலைப்பை ஒப்படைக்கவேண்டும். அவர்கள் வழங்கப்பட்ட காலஎல்லையில் இதனை துறைபோக ஆய்வு செய்து அவர்களின் தலைமையில் நன்கு அனுபவமான மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து அல்குர்ஆன் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதனை விட்டு குறுகிய வட்டத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அது காலநேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் ஒரு முயற்சியாகவே அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.