Header Ads



புனித அல்குர்ஆனையும், புஹாரி ஹதீஸ் கிரந்தத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொஹ்ஸின் கான் வபாத்


ஆங்கில மொழிக்கு குர் ஆணை மொழி பெயர்த்த பிரபல மொழி பெயர்ப்பாளர் Dr. மொஹ்ஸின் கான் வாபாத் ஆகியுள்ளார். அல்லாஹ் அவர்களுக்கு மேலான சொர்க்கத்தை அருள்வனாக.. ஆங்கில மொழிக்கு புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை முதல் முதலில் மொழி பெயர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஜனாஸா நல்லடக்கம் மதினாவில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

1927 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர், 1950 இல் இங்கிலாந்தில் மருத்துவ கற்கையை நிறைவு செய்து சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் உள்ள இராணுவ மருத்துவ மனைக்கு பணிப்பாளர் ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.

1961 ஆம் ஆண்டு மதீனா பல்கலைகழகம் திறந்து வைக்கப்பட்ட போது அங்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கே  தன்னுடைய மொழி அறிவை இஸ்லாமிய வழியில் செலவிட திட சங்கட்பம் பூண்டு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் உதவியுடன் குர்ஆனை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்தார். அதன் பின்னர் புகாரி கிரந்தத்தை மொழி பெயர்ப்பு செய்தார்

அல்லாஹு தஆலா அவருக்கு மேலான சொர்க்கத்தை வழங்குவானாக..

ஆமீன்

2 comments:

Powered by Blogger.