Header Ads



கொழும்பில் பணக்காரர்களின் வீடுகளில், வேலை செய்யும் சிறுவர்கள்


கொழும்பில் பல பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் பணியாற்றுவதற்காக சிறுவர்களை ஈடுபடுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளதென தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அவ்வாறான வீடுகளை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அந்த வீடுகளில் சிறுவர்கள் பணியாற்றினால் வீட்டு உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு பிரதேசத்தில் பணக்கார குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இவ்வாறான வீடுகளை சோதனையிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு சிறுவர்கள் பணியாற்றினால் வீட்டில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மசாஜ் நிலையங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் குறித்து பெரிதாக திருப்தியடைய முடியவில்லை.

இது தொடர்பில் பொலிஸாரிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.