Header Ads



சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால், அவர்களது தலைகளை சீனாவின் இரும்புப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்


சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால், அவர்களது தலைகளை சீனாவின் இரும்புப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்

பிற நாடுகளை சீனா ஒருபோதும் ஒடுக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்புப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

பெய்ஜிங் நகரின் தியானென்மன் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் பேர் முன்னிலையில் ஷி ஜின்பிங் உரையாற்றினார். கூடியிருந்தவர்களின் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை.

யாரும் சீனாவை அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜின்பிங் தனது உரையின்போது கூறினார்.

தங்களது வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டுவிழாவை ஒட்டி பெய்ஜிங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

1921-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு 72 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. BBC

No comments

Powered by Blogger.