July 27, 2021

ஹிசாலினியின் கொலையை ஒரு முஸ்லிம் அமைப்பும் கண்டிக்கவில்லை, றிசானாவின் தலை வெட்டப்பட்ட போது தமிழ் அமைப்புக்கள் கண்டித்தன - கருணா


ஹிசாலினி துஷ்பிரயோகத்திற்குள்ளானமை தொடர்பில் பல தமிழ் அமைப்புகள் சிங்கள அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், ஒரு முஸ்லிம் அமைப்பு கூட அதற்காகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது கருத்து அவர்,

ஹிசாலினி என்கின்ற சிறுமியின் கொலைக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஒரு உறுப்பினர் கூட குரல்கொடுக்கவில்லை. இது வேதனையான விடயம். இவர்கள் எவ்வளவு இனத்துவேசத்துடன் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியினர் இதனைச் சேறு பூசி மறைக்கின்ற ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்களே தவிர அதன் உண்மைத் தன்மையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அனைவருக்கும் தெரியும். ஹிசாலினி என்கின்ற சிறுமியின் படுகொலை சம்பந்தமான பிரச்சினை. இது மிகவும் பூதாகரமாகப் பேசப்பட்டு வருகின்றது. உண்மையிலே இலங்கை சட்டத்தின்படி வயது குறைந்தவர்களை வீட்டு வேலைகளில் அல்லது எந்த வேலையிலும் அமர்த்த முடியாது என்பது இலங்கையில் இருக்கின்ற ஒரு கடுமையான சட்டம். அதையும் மீறி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் வீட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வேலைக்கு என அமர்த்தி அந்த சிறுமி மானபங்கப்படுத்தப்பட்டு மரணமடைந்துள்ளார்.

இதற்கான வைத்திய சான்றிதழ்கள் அங்கு வழங்கப்பட்டுள்ளது. பாரிய கொடுமைகள் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதை நாம் உண்மையிலேயே மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகப் பார்க்கின்றோம். இன்று எங்களுடைய தமிழ் சிறுமிகள் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலத்தில் கூட இதை நான் பலமுறை எடுத்துக் கூறி இருக்கின்றேன். எங்களுடைய தமிழ் பெண்கள் வேலை வாய்ப்புகள் தேடி மாற்றுச் சமூகத்திடம் மண்டி இடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நான் பலதடவை எடுத்துக் கூறி இருக்கின்றேன். அதை நாம் எமது கட்சியின் கொள்கையாகக் கூட வைத்திருக்கின்றோம்.

அந்த வகையில் பார்க்கும் போது இதற்கான கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவர்களுக்கும் நாம் இது தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளோம்.

அது யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் அரசாங்கத்திடமும் அதுசார்ந்த துறைசார் அதிகாரிகளிடமும் நாம் வேண்டுகோளாக விடுக்கின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக நான் தமிழ் மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

இதை பலதரப்பட்ட சமூகப் பிரச்சினையாக நாம் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் பார்க்கும் போது பெண்ணுரிமைகள் மீறப்படுகின்றது. பல தமிழ் செல்வந்தர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும் எங்களுடைய சிறார்களை மாற்றுச் சமூகத்திடம் கையேந்த விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் எமது புலம்பெயர்ந்து வாழ்கின்ற வர்த்தகர்கள் அல்லது செல்வந்தர்களிடம் நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன். இந்த பிரச்சினையுடன் தொடர்புபட்ட அமைச்சர் ஏற்கனவே சஹ்ரானின் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுப் பல விசாரணைகள் தொடர்கிறது.

அதுபோன்ற ஒரு கொடூரமான குடும்பத்தில் இந்த சிறுமி தற்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றார். அவர் மாத்திரமல்ல பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றது. இன்று பல குற்றப்புலனாய்வுத் துறையினர் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றனர். இதே போன்று பல பெண்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூட வந்திருப்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் உண்மையிலேயே சட்டவாளர்கள். சட்டத்தை இயக்குபவர்கள் ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்ற போது அங்கு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையை உயர்த்துகின்ற போது அந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

அவ்வாறு சட்டத்தை நிறைவேற்றுகின்ற பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில். இந்த இலங்கை சட்டத்தையும் மீறி இன்று இவ்வாறு சிறுமிகள், சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.

எதிர்க்கட்சி தற்பொழுது பலம் அற்று காணப்படுகின்றது. மக்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று எதிர்க்கட்சியினர் பலதரப்பட்ட பிரச்சினைக்குக் குரல் கொடுத்தாலும் கிசாலினி என்கின்ற சிறுமியின் கொலைக்கு எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஒரு உறுப்பினர் கூட நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கவில்லை இது வேதனையான விடயம். அப்போது ரிசானா என்கின்ற ஒரு சிறுமி சவுதியில் தலை வெட்டப்படுகிறது எனப் பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த சிறுமி விடுவிக்கப்பட வேண்டும், தரப்பு தவறுதலாக இடம்பெற்றது என்று. ஆனால் இன்று இந்த கொலைக்கு எதிர்க்கட்சியினர் கூட உண்மையிலே கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களும் அதை சேறு பூசி மறைக்கின்ற ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள், உண்மைத் தன்மையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.  

9 கருத்துரைகள்:

Who is this idiot.
Why should we worry about suicide

முஸ்லீம் அமைப்புக்கள் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்கள்.அர்கள் குடிகாரர்கள் இல்லை, சினிமா பைதியங்கள் இல்லை.முதலில் குற்றவாளி யார் என்று தெறியாமல் குடிகாரனைப்போல் சும்மா உளரமாட்டார்கள்.

இனத்துவேசி, மற்றொரு துவேசத்தைக் கக்குகின்றான்.

Karuna thuweesi.
ITHU KOLAI ALLA .PALIWAANGUM DRAMA.EASTER ATTACK POLA .

உன்னைப் போல ஒரு முஸ்லிம் இன விரோதியை கண்டதில்லை

தீர்க்கமான முடிவற்ற விடயங்களில் சரியான இஸ்லாமியன் அவதூறு கூற விளைய மாட்டான். கடமை செய்பவர்கள் ஒரு செய்தியினை உறுதிப்படுத்தும் வரை ஒரு வி்டயம் பற்றி செய்தி பரப்புவது இஸ்லாமியனின் பார்வையில் பாவமானது. எடுத்ததற்கெல்லாம் எதிர்மறையான சிந்தனை கொண்டு எதிர்க்கும் சமூகத்தை இஸ்லாமிய சமூகம் பின்பற்ற வேண்டிய அவசியமுமில்லை. ஒரு விடயத்தைச் சொல்பவரின் தகைமையும் பார்க்கப்பட வேண்டியுமுள்ளது.

உலகம் இயங்குவதற்கு இயற்கை சில பல தொழிலநுட்பங்களை வகுத்து வைத்திருக்கின்றது. இதனை மாற்றுவதற்கு உலகப் பொருளாதாரம் முழுக்க ஒன்று சேர்ந்தாலும் ஒரு அணுவளவும் மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற முற்பட்டால் இயற்கையானது, இயற்கையானதும் செயற்கையானதுமான அழிவுகளைக் கொண்டுவந்து சமநிலைப்படுத்தும். செயற்கை அழிவு மூலம் சமநிலைப்பபடுத்தியதற்கு இவரை விட பெரிய உதாரணம் தேபை்படாது என நினைக்கிறேன். தொழிலாளியும், முதலாளியும் வாழ்வது இயற்கை வகுத்த தொழில் நுட்பமே அதனை மாற்றியமைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. ஏதோ சமூகங்களிலிருந்தும் இரு வர்க்கமும் வாழ்ந்தே தீரும். எப்போதும் எதிர்மறை சிந்தனை கொண்ட சமூகங்களே தொழிலாளிகள் வர்க்கமாக வாழ்ந்து வருகின்றன. இவர் இரும்புகளுடன் அதிக காலம் சம்பந்தப்பட்டவர் என்பதால் புத்தகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமான கருத்துரையாகும்.

இவருக்கு இந்த விடயம் தொடர்பில் போதிய விளக்கவின்மை காரணமாக வாய்க்கு வருவதையெல்லாம் பிதற்றிக் கொள்கிறார்.

எல்லா wattukum ஓரு neramundu. இது உனது neram.

Karuna displays his Hostility and Hatred towards the Muslims in the most Blatant manner.

1. He blames Muslim organisations and Muslim Parliamentarians for not speaking out against the "murder" of Hishalini. How does he KNOW it is murder and NOT suicide when this is yet to be established by the relevant Authorities?

2. He claims that " Sri Lankan Law stipulates that Minors cannot be
employed in domestic or domestic work".

Can he give more details of this Law, specifically its name and when
it was passed?

He also claims of "Mass atrocities and harassment" committed against the girl. If so, how come her mother who has been visiting the daughter quite regularly to get other favours from Rishard Badiuddin and his family NEVER complained of the so-called "Mass atrocities and harassment" suffered by her daughter after her visits?

Fact is, this Karuna is quite familiar with "Mass atrocities and harassment" because that is what he had been committing DAILY against the Muslims of the East during his career as a TERRORIST. His major achievements in this regard are the HEARTLESS and BRUTAL MASSACRE of Hundreds of worshippers in Mosques in Kattankudy and Eravur which was preceded by the HEARTLESS MASSACRE of over 60 Returning Hajj Pilgrims in Kurukkal Madam. There were several VICIOUS ATTACKS on the Muslims in the East which resulted in the Brutal Murder of an estimated 1000 Muslims during Karuna's tenure as the commander of the LTTE in the East.

After all his BRUTALITIES against the Muslims in the East, it was a Muslim from the East, Ali Zahir Mowlana, who helped this Muslim-Killer to defect to the Government in July, 2004.

This Muslim Hating Karuna with so much Muslim Blood in his hands, has the temerity to claim that the death (cause not known yet) of a single girl as "Mass Atrocities and harassment". What sort of an Inexplicably Warped claim is that?


Has he ever asked himself whether he would have been alive today, if NOT for a Muslim? No doubt, he would have tasted the LTTE Justice himself if not for a Muslim who helped him to flee the East, save his life, and SHAMELESSLY continue to Berate the Muslims without any rhyme or reason.

Post a Comment