Header Ads



பொது பலசேனாவை தடைசெய்ய, அமைச்சரவை உபகுழு பரிந்துரைக்கவில்லை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை துணைக்குழு, பொது பல சேனா (பிபிஎஸ்) அமைப்பை தடை செய்ய பரிந்துரைக்கவில்லை என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று ஊடகங்களிடம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

வெவ்வேறு அம்சங்களை கவனித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை துணைக்குழு பொது பல சேனா அமைப்பின் தடைக்கு பரிந்துரைக்கவில்லை.

மாறாக தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவே இந்த தடை குறித்து தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் குற்றவியல் புலனாய்வுத்துறை மற்றும் பிற சட்ட அமுலாக்க அதிகாரிகளின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னரே அமைச்சரவை உபகுழு பொது பல சேனா அமைப்பின் தடை குறித்து முடிவெடுக்கும் என்று ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 11அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை இஸ்லாமிய அமைப்புக்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Powered by Blogger.