Header Ads



கப்பம் பெறும் யுகம் ஆரம்பமாகியுள்ளது, முறையிட்டாலும் தலைவர்கள் கண்டுகொள்வதில்லை, பணியாற்ற முடியாதுள்ளது - இராஜாங்க அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு


ஒரு இராஜாங்க அமைச்சர் கப்பம் பெறுவதாக அரசாங்கத்தின் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரான பிரியங்கர ஜயரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். 

கும்புக்கடவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வௌிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார். 

"இப்போது கப்பம் பெறுவோர் உருவாகி உள்ளனர். சட்டவிரோதமாக மண் அகழ்வதை நாம் எதிர்க்கின்றோம். ஆனால் ஒரு இராஜாங்க அமைச்சரின் குண்டர் குழு தற்போது ஒரு லொறிக்கு 500 ரூபா என கப்பம் பெறுகின்றனர். இதனால் மிகவும் ஆபத்தான நிலைமை உருவாகி உள்ளது" என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் பிரியங்கர, சில பிரச்சினைகளில் நாம் கவலை அடைகிறோம். ஆனமடுவ என்பது இரண்டாவது பெரிய தொகுதி. சிலர் இதற்குள் நுழைந்து கொள்ளையடிக்க பார்க்கின்றனர். வேறு மாவட்டங்களில் இருந்து வந்து அரசியல் சண்டியர்களாகி சிலர் செயற்படுவதால் அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர். கப்பம் பெறும் யுகம் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்து முறையிட்டாலும் தலைவர்கள் கண்டுகொள்வதில்லை. நாம் மிகவும் அதிருப்தியில் உள்ளேன். அமைச்சில் பணியாற்ற முடியாதுள்ளது. இதனை கூறினாலும் தலைவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. கவலையாக இருக்கிறது. அதனால் அரசியலில் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என்று  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.