Header Ads



ஐதேக மறுசீரமைப்பிற்கு ரணிலினால் புதிய குழு நியமனம் - காலத்தைக் கடத்தும் நாடகமா..?


ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கவும் கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் உப தலைவர்களான அகிலவிராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்னாயக்க அகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வார இறுதி நாளிதழ்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு இதற்கு முன்னரும் பல்வேறுபட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் அந்த குழுக்களின் பரிந்துரைகள் யாவும் வீணாய்ப்போயுள்ளன.

N.G.P. பண்டித்தரத்ன குழு, பிட்டிபன குழு, மனோ-மலிக் குழு போன்றவற்றோடு, கரு ஜயசூரிய தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இதனிடையே, இதற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ருவன் விஜேவர்தன குழுவினுடைய பரிந்துரைகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த குழுவும் முன்னர் அமைக்கப்பட்ட குழுக்களின் நீடிப்பாக மாறுமா?

இதுவும் காலத்தைக் கடத்தும் ஓர் நாடகமா? (News 1st)

1 comment:

  1. ​கையாலாகாத ரணில் அரசாங்கத்தை வலுப்படுத்த மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.இவரின் சூழ்ச்சிகளை ஐதேக.புரிவதில்லை. கருஜயசூரியாவுக்குத் தெரியும் அது நாடகமென்று. எனவே நாடகத்தை அவர் கைவிட்டிருக்கின்றார்.ஆனால் மேலே உள்ள போடோவில் உள்ள அனைத்தும் ஐதேக. யின் நம்பர் வன் கள்வர்கூட்டம். அது மற்றொரு நாடகத்தின் நடிகர்கள். ஆனால் உருப்புடியாக எதுவும் செய்யாத கள்வர்கூட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.