Header Ads



ரிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற, ஆசைப்படும் ஓமல்பே சோபிததேரர்


குற்றவாளிகளை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என ஓமல்பே சோபிததேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்த விபரங்களையும் அதனுடன் தொடர்புபட்ட சம்பவங்களையும் மூடிமறைப்பதற்கு அனுமதிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொலிஸார் மற்றும் ஏனைய அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என ஓமல்பே தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் கொலைகாரர்கள் திருடர்கள் நாடாளுமன்றத்தை தங்கள் அதிகாரத்திற்கான இடமாக மாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ள ஓமல்பே சோபித தேரர் ரிசாத்பதியுதீன் போன்றவர்கள் தொடர்ந்தும் நாடாளுமன்ற கடமைகளை நிறைவேற்ற அனுமதிப்பது குறித்து  ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. IF THIS THERO(BUDAAM SARANAM KATCHAMI)SAYS IS CORRECT MORE THAN 75% OF MEMBERS OUT 225 SHOULD BE THROWN OUT OF PARLIAMENT.

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தை வடிவமைத்த முஸ்லிம்களை பாராளுமன்றத்தை விட்டு வெளியேற்ற செய்யப்படுகின்ற சதிகளே இந்த சக்திகளின் நாடகங்கள். (Made in Israel & India)

    ReplyDelete
  3. துவேச நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம்.இந்த நாடகங்கள் நாட்டை அழிவுக்குக் கொண்டு செல்வதை தௌிவாக அவதானிக்கமுடிகின்றது.

    ReplyDelete
  4. ஐயா, நீங்கள் கூறுவது தத்துவார்த்தரீதியில் உண்மைதான். ஒருவன் உண்மையில் குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். அவற்றை மறுப்பதற்கு இல்லை. இந்தக் கட்டததில் மத குருமார்களின் தேவை மிக அளப்பரியது. மத குருமார்கள் தமது ஆத்மீகக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றும் பட்சத்தில் மக்கள் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடுவார்களா? தாங்கள் செய்ய வேண்டியது முதலில் தங்களைத் திருத்துங்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதனை விடுத்து மக்களுடன் மக்களாக வாழ்வதற்கு முதலில் தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். அரசாங்கத்தினதும் மற்றும் கோயில்களின் பராமரிப்பில் வாழ்வதனை தாங்களும் ஏனைய குருமார்களும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து, பௌத்த மத குருமாரகளை சீர்திருத்துவதற்கு முயற்சி எடுங்கள். அவரகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி எடுங்கள். அறிக்கை விடுவதனால் மட்டும் ஒருவர் மகாத்மாவாக மாறிவிட முடியாது.

    ස්වාමීනි, ඔබ කියන දෙය න්‍යායාත්මකව සත්‍යයකි. යමෙකු සත්‍ය වශයෙන්ම අපරාධයක් කළහොත් ඔහුට ද beුවම් කළ යුතුය. ඒවා ප්‍රතික්ෂේප කිරීමක් නැත. මෙම අවස්ථාවෙහිදී පූජකයන්ගේ අවශ්‍යතාවය අතිමහත් ය. පූජකවරුන් තම අධ්‍යාත්මික යුතුකම් නිසි පරිදි ඉටු කළහොත් මිනිසුන් අපගමනයෙහි යෙදෙනවාද? ඔවුන්ට කළ යුත්තේ මුලින්ම තමන්ම සංස්කරණය කර ගැනීමයි. සුඛෝපභෝගී ජීවිතයක් ගත කරනවා වෙනුවට මිනිසුන් සමඟ ජීවිතයක් ගත කිරීමට පළමුව ඔබ දැනුවත් වන්න. ඔබ සහ අනෙකුත් පූජකයන්ගේ රජය සහ පන්සල් භාරයේ ජීවත් වීමෙන් වළකින්න. ඊළඟට බෞද්ධ පූජකයන් ප්‍රතිසංස්කරණය කිරීමට උත්සාහ කරන්න. ඔවුන් විවාහකව තබා ගැනීමට උත්සාහ කරන්න. ප්‍රකාශයක් කළ පමණින් කෙනෙකුට මහත්මා වීමට නොහැකිය.

    Sir, what you say is theoretically true. One must be punished if one actually commits a crime. There is no denying them. The need for clergy at this stage is enormous. Will people engage in deviant behavior if the clergy perform their spiritual duties properly? All they have to do is edit themselves first. Train yourself first to live a life with people instead of living a life of luxury. Avoid living in the care of the government and the temples, you and the other priests. Next, try to reform the Buddhist clergy. Try to keep them married. One cannot become a Mahatma just by making a statement.

    ReplyDelete
  5. பிள்ளையான் நல்ல பிள்ளை, கருணா நல்ல கருணையாளன், துமிந்த சில்வா நல்ல தோழன் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவுடன்.........குற்றம் நிரூபிக்கப்படாத ரிஷாட்டை நினைத்து வெட்கப்படு, வேதனைப்பட்டு.

    ReplyDelete
  6. Summa kattama amadiyaha iringa master.

    ReplyDelete

Powered by Blogger.