Header Ads



தந்தையும், சகோதரும் ​கண்ணீர் சிந்த 'உனக்கு நீதி கிடைக்கும், அதுவரை அழமாட்டேன்' என ஆக்ரோசமாக கத்திய தாய்


ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், டி சந்ரு

கண்ணீர் மல்கி, தோட்டமே சோகத்தில் மூழக்கியிருக்க மத வழிபாட்டுகளுடன் அடக்கம் செய்யப்பட்ட 16 வயதான சிறுமி இஷாலின் ஜூட்டின் சடலம், பார்த்துகொண்டிருந்த அனைவரும் வாய்க்கட்டி மௌனித்திருக்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (30) தோண்டியெடுக்கப்பட்டது.

14 நாள்களுக்குப் பின்னர், தோண்டியெடுக்கப்பட்ட அச்சிறுமியின் சடலம், இரண்டாவது பிரேத பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (30) கொண்டுச்செல்லப்பட்டது.

, நுவரெலியான மாவட்ட நீதிமன்ற நீதவான்  லுசாகா குமாரி தர்மகீர்த்தி நேற்றுக்காலை 8.50 க்கு ஆரம்பிக்கப்பட்டன. அங்குலம் அங்குலமாக ஆழப்படுத்தப்பட்டு, பகல் 12.20 மணியளவில், சவப்பெட்டி குழியிலிருந்து மேலேயே எடுக்கப்பட்டது.

சவப்பெட்டிக்கு அருகில் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான்  லுசாகா குமாரி தர்மகீர்த்தி சென்றார். சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரன் மூவரும் நீதவானுக்கு முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.

“சடலத்தை அடையாளம் காண்பதற்காக சவப்பெட்டியை திறப்பதில் எவ்விதமான ஆட்சேபனைகளும் இருக்கிறதா”? என நீதவான் வினவினார். அதற்கு அம்மூவரும் தலையை அசைத்தும், வாய்மூலமாகவும் “இல்லை” என பதிலளித்தனர். சடலத்தை அடையாளம் காட்டினார்.

சவப்பெட்டி மே​லே எடுக்கப்பட்டபோது, தந்தையும் சகோதரும் ​கண்ணீர் சிந்திவிட்டனர், கதறிகூட அழமுடியாத நிலையிலிருந்த அச்சிறுமியின் தாய், “உனக்கு நீதி கிடைக்கும். அதுவரை அழமாட்டேன்”  என தமிழிலும், சிங்களத்திலும் ஆக்ரோசமாக கத்தினார். எனினும், அங்கிருந்தவர்கள் தாயை அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

பேராதனை போதனா வைத்தியசாலையில், நிபுணர்களின் முன்னிலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர், அதன் அறிக்கை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்கப்படும்.

2 comments:

  1. Hahaha…innam oru 2 laks kudutha anda thai innam solluwa

    ReplyDelete
  2. பணத்திற்காக பெற்ற மகளை முகம் தெரியாத நபரோடு அனுப்பிவிட்டு இன்று ஊடங்கங்கள் முன் நீலிகண்ணீர் வடிக்கும் கேவலங்கள் இவர்கள்.நிச்சயமாக இந்த கண்ணீரும் பணத்திற்காக தான் இருக்கும். பணம் என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவன் இந்த தோட்டகாட்டான்

    ReplyDelete

Powered by Blogger.