July 29, 2021

முஸ்லிம் சமூகம் குறித்த, சுய விமர்சனம்


- Ajaaz Mohamed -

எங்களது மக்கள்...

🔔 மாற்றுச் சமூகத்தாரிடம் கூலி வேலைகளுக்குப் பெரும்பாலும் செல்வதில்லை

🔔 எங்களுடைய பெண்கள் மிக மிகப் பெரும்பாலும் மாற்றுச் சமூகத்தாரிடம் கூலி வேலைகளுக்கோ வீட்டு வேலைகளுக்கோ செல்வதே இல்லை

🔔 பெரும்பாலும் நகர சபைச் சுத்திகரிப்புப் பணி,  தாதிப் பணி, சிற்றூழியர் பணி, வீதித் திருத்தப் பணி போன்ற துறைகளில் இல்லை

🔔 பெரும்பாலும் அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்தெடுக்கப் போவதில்லை

🔔 உள்ளூர ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை வெளியே காட்டிக் கொள்ளாமல் வெளித் தோற்றத்தில் வசதியாக வாழ்கிறார்கள், நல்ல நல்ல அரச பணிகளில் உள்ளார்கள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் வைத்திருக்கிறார்கள்

🔔 பெரும்பாலும் மும்மொழிகளிலும் பேசுகிறார்கள், எங்கு போனாலும் தங்கள் வேலைகளைச் சாதித்துக் கொள்கிறார்கள் 

🔔 இறுக்கமான சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள், பள்ளிவாசல்கள் விசாலமாக உள்ளன, மார்க்க ஈடுபாடு நிறைந்தோராக உள்ளனர்

🔔 மிகப் பெரும்பாலானோர் மதுபானம், புகைப் பழக்கம் இல்லை 

🔔 எந்தவொரு முஸ்லிமுக்கும் இந்த நாட்டில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களோ மது விற்பனை நிலையங்களோ இல்லை 

🔔 கூடுமான வரை மாற்றாரது ஹோட்டல்களில் சாப்பிடுவதில்லை, மத இணக்கம் எனும் பெயரில் மாற்றுமதத் தலங்களுக்குச் செல்வதில்லை

🔔 ஏனைய சமூகங்களின் கலாசாரக் கூறுகள் மேற்கத்திய மயப்பட்டுள்ள அளவுக்கு நமது கலாசாரக் கூறுகளில் அந்த மாற்றங்கள் இல்லை 

🔔 சுதந்திர தினம், தேசிய விவகாரங்கள், சூழல் பாதுகாப்பு, குடும்பக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்றொரு கருத்துள்ளது

🔔 நமது அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள், தமது சொந்த நலன்களுக்காக அமைச்சுக்களில் ஒட்டிக்கொண்டு அபிவிருத்தி என்ற பெயரில் செய்யும் வேலைத்திட்டங்கள் பிறரது கண்களை உறுத்துகின்றன 

🔔 1956, 1983, 1986, 2009 களில் ஏற்பட்ட அழிவுகளில் அவர்களில் கணிசமானோர் பாதிக்கப்பட்டனர், நாம் அப்படிப் பாதிக்கப்படவில்லை என்றதோர் தவறான அபிப்பிராயம் அவர்களிடம் உள்ளது...

✔ இவை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அவர்கள் நம்மீது ஒருவித வெறுப்பில், காழ்ப்புணர்வில் இருக்கிறார்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது வழிகளில் நம்மைப் பழிவாங்கப் பார்க்கின்றனர்.

✔ எனவே, நாம்தான் மிகுந்த நிதானத்தோடும் சகிப்புத்தன்மையோடும் நடந்துகொள்ள வேண்டும், நம்மையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளவும் வேண்டும் !


9 கருத்துரைகள்:

Yes But MADHA Nallinakkam Neenga pottathu PILAI.. Pansalaikku thattodu pokitarkal.

மிக முக்கியமாக
வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிர மத்த்தவர்களுடன் ஏற்படும் சிறு சிறு தகராருகளிலோ , அசம்பாவிதங்களிலோ பொராமையின் நிமித்தம் நிலைமையை வேண்டுமென்றே பூதாகரமாக்கி இனக்கலவரமாக்கி மற்ற இனத்து அப்பாவிகளின் இருப்பிடங்களையும் பொருளாதாரத்தையும் அழித்ததாக வரலாரே இல்லை. எனக்கு தெறிந்த வகையில் இது தமிழர்களுக்கும் பொருத்தும் . விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் செய்த்ததைத்தவிர. ஆனால் சிங்களவர்களில் இவ்வாறான சம்பவங்கள் வரலாறு நெடுகவும் காணலாம் . நான் அறிந்த வகையில் இதற்கான முக்கிய காரணம் சிங்கள சமுகத்தில் உள்ள பொறாமை என்ற கொடிய கணமே. இந்த உண்மையை சிங்கள சமுகத்தில் உள்ள பலர் தன் வாயினாலை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாம் இந்த நாட்டில் கலந்து வாழவேண்டும்.கரைந்து வாழக்கூடாது.இந்த நாட்டின் பிற இனச் சொந்தங்களுடன் நாம் நமது வரையறைகளையும் மீறாது பிற சகோதரர்களின் கலாச்சாரம்,உணர்வுகளையும் விளங்கி வாழ வேண்டும்.ஒன்று பட்டு வாழ ஏராளமான ஒருமைப்பாடுகள் உள்ளன.வேற்றுமையிலும் ஒற்றுமை.

அப்படியே போட்டுக் கொடுத்தீங்களே!

You should know what to write and how to write in public ....why do you bring our community issue like this in public .
Jaffna Muslim should have some common sense when it publish article like this

இவர்கள் பாணியில் முஸ்லிம்களும் குடிக்கு அடிமையாகி முஸ்லிம் பெண்களும் சுத்திகரிப்பு வேலைக்கு செல்லவேண்டுமோ? இவர்களை போன்று காட்டிக்கொடுப்பவர்கள் தான் ஆபாயங்கரமானவர்கள்

மாற்று சமூகத்தினரை தரக்குறைவாகவும் உங்கள் சமூகத்தை உயர்வாகவும் மதிப்பிடுவது சிறப்பானதல்ல. உலகில் உயர்ந்த தாழ்ந்த சமூகங்களை அவர்களின் நெறிமுறைகளைக்கொண்டு மட்டுமே கணிப்பிடலாம்.
மலையக மக்கள் தொழிலாளிகள் என்பது மறுப்பதற்கில்லை. மலையக தம்பி தங்கைமார் முநநடளஇ ஊயசபடைடள ளரிநசஅயசமநவ களில் வேலை செய்கிறார்கள் உங்கள் சமூகத்தினர் வெளியிலிருந்து பிச்சை எடுக்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களிலும் கொழும்பு நகர் முழுவதும் நூற்றுக்கணக்காக கடை கடையாக ஏறி இறங்கி பிச்சை எடுப்பது மாற்று சமூகத்தினர் அல்ல. இவர்கள் நீங்கள் குறிப்பிடும் மாற்று சமூகத்தனரிடமும் கையேந்துகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலை செய்ய சென்றவர்களில் பெரும்பான்மையினர் யார்? கொழும்பில் குடிசைவாழ் மக்களில் அதிகமானவர்கள் யார்? படிப்பறிவின்றி அதிகமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பவர்கள் யார்?
உங்களை தரக்குறைவாக மதிப்பிடுவதற்காக இதனை பதிவிடவில்லை. மாறாக ஒப்பீடு செய்வதற்கு முன் உங்கள் குறைகளையும் பார்ப்பது நல்லது. இப்படிப்பட்ட உங்களது சிந்தனைகள் காhழ்ப்புணர்ச்சியை மட்டுமே உருவாக்கும்.

குளிக்க போய் சேற்றில் விழுந்து மற்ற முஸ்லிம்களுக்கும் சேற்றை பூசி விட்டது நல்லா இருக்கு. வக்காலத்து வாங்கும் முதல் உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Post a Comment