Header Ads



சிங்கள இனவாதிகள் மூலமாக, ஹக்கீமுக்கு எதிராக களமிறங்கியது ஹிரு

கைதிகள் விடுவிக்கப்பட்டமை மற்றும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில், வெவ்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யதார்த்தம் அமைப்பின் பொதுச்செயலாளர் கிரிஹிப்பன்ஆரே விஜித தேரர், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய ரில்வானை பார்க்கச் சென்றதை வெளிப்படுத்தியமை தொடர்பிலான பிரச்சினை காரணமாகவா நாடாளுமன்றில் ஹிரு ஊடகத்தை தாக்கி அவர் கருத்து வெளியிட்டுள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றது.

சானி அபேசேகர, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரின் குரல் பதிவுகளில் அந்த அநீதி தெரியவந்தது.

அந்த அநீதிக்கு நீதியை நிலைநாட்டுவதையே ஜனாதிபதி செய்ததாக கிரிஹிப்பன்ஆரே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சஹ்ரான் ஹஸீமின் சகோதரர் குண்டுகளை பரிசோதித்து பார்ப்பது தொடர்பான விடயங்கள் ஹிருவில் காண்பித்தபோது, ரவூப் ஹக்கீமுக்கு வலித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் உரிய முறைமையில் நடைமுiயானால், ரவூப் ஹக்கீம் தற்போது, ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இருக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டும் என சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. yaaaruda intha dan prasath..kudikaarappayal....ivanellam naattuk...?? ayyo naadu uruppadumngo!!!!

    ReplyDelete

Powered by Blogger.