Header Ads



லெபனான் நாட்டின் நிலை, விரைவில் இலங்கைக்கும் ஏற்படும் - சம்பிக்க


இலங்கையின் எரிபொருள் விநியோகத்திற்கான வேண்டுகோள்களை ஏற்கமாட்டோம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க விரைவில் லெபனான் நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை லெபானின் நிலைக்கு தள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி குறித்து போலி நாடகமாடுகின்ற போதிலும் பல மாதங்களாக பணம் செலுத்தாததால் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இலங்கையின் எரிபொருளிற்கான வேண்டுகோள்களை ஏற்க மறுத்துள்ளனர் என அவர் தெதரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளால் லாப்ஸ்

 போன்ற சில வலுவான நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லாப்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியின பின்னர் இலங்கையின் காஸ் சந்தைப்படுத்தும் தொழில்துறை மோசடிக்கும்பல்களின் கரங்களிற்கு சென்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.