Header Ads



இலங்கையில் முழு வங்கி முறையும், அதிக ஆபத்தில் உள்ளது - ஹர்ஷ டி சில்வா


பிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் வங்கி முறை குறித்து எச்சரிக்கிறது என்கிறார் கலாநிதி ஹர்ஷ டி சில்லவா அவர்கள்.இன்று(01) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை குறித்த பிட்சின் சமீபத்திய அறிக்கை இலங்கை வங்கி முறை குறித்து எச்சரிக்கிறது.  இந்த அரசாங்க வங்கிகள் டொலர் கடன்களை எடுத்துள்ளதே இதற்குக் காரணம்.  இதன் விளைவாக, இலங்கையில் முழு வங்கி முறையும் அதிக ஆபத்தில் உள்ளது.  மறுபுறம், ஒரு நாடு என்ற வகையில், வரலாற்றில் மிகப்பெரிய பரிமாற்ற நெருக்கடிக்குள்ளும் நாம் செல்கிறோம்.

இந்த சூழ்நிலையில் நான் காணும் மிகச் சிறந்த குறுகிய கால தீர்வு சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதுதான்.  ஆனால் இந்த நீண்டகால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இலங்கை உலகிற்கு   திறந்த நிலையில் செயற்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.