Header Ads



காகத்தை கொன்று அதன் ஒரு இறக்கையை தொங்கவிட்டால், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சத்தில் மௌனமாகிவிடுவார்கள் - ஜோன்ஸ்டன்


அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச காகமொன்றை கொன்று அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பல்வேறுஸ்தாபனங்களே ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸமஹராமா வாவி திட்டம் என்பது அரச திட்டம் யார் அதனை எதிர்ப்பது என கேள்வி எழுப்பியுள்ள அவர் தொல்லியல் திணைக்களமும் அரசாங்கத்தின் ஒரு பகுதியே- அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியவுடன் அனைத்து அமைச்சுகளும் அனைத்து திணைக்களங்களும் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் ஜனாதிபதியும் அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதே பிரச்சினையாக உள்ளது,நீங்கள் ஒரு காகத்தை கொண்டு அதன் இறக்கையை அனைவரும் பார்க்கும் விதத்தில் தொங்கவிடுங்கள்-அனைத்தும் சுத்தமாகிவிடும் எனவும்; அவர் குறிப்பிட்;டுள்ளார். Thinakkural

3 comments:

  1. What a good gentleman and Politician .god bless your all

    ReplyDelete
  2. கொலை காரனோடு சேர்ந்தால் கொலைப்புத்திதான் இருக்கும்

    ReplyDelete
  3. எதற்கெடுத்தாலும் கொலை வெறிதான்

    ReplyDelete

Powered by Blogger.