July 14, 2021

"ம‌ஹிந்த‌ த‌ர‌ப்புக்கு எப்போதும் விசுவாச‌மாக‌ இருக்கும், முஸ்லிம் க‌ட்சிக‌ளை ப‌ல‌ப்ப‌டுத்த‌ பசில் ராஜ‌ப‌க்ஷ‌ முன் வ‌ர‌வேண்டும்"


முஸ்லிம் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ளையும், ம‌க்க‌ள் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ளையும் ந‌ம்பி பெசில் ராஜ‌ப‌க்ஷ‌வால் முஸ்லிம் ச‌மூக‌த்தை ராஜ‌ப‌க்ஷ‌ த‌ர‌ப்பின் ப‌க்க‌ம் கொண்டு வ‌ர‌ முடியுமா என உலமாக்கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.  

நிச்ச‌ய‌ம் முடியாது. இந்த‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளும் முஸ்லிம் ச‌மூக‌த்தை ஏமாற்றி த‌ம‌து சொகுசு வாழ்க்கையை ம‌ட்டுமே உறுதிப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள்.

கொஞ்ச‌மும் வெட்க‌ம் இன்றி ராஜ‌ப‌க்ஷ‌ குடும்ப‌த்தை ஏசுவார்க‌ள். பின்ன‌ர் எந்த‌ வெட்க‌மும் இன்றி ராஜ‌ப‌க்ஷ‌ த‌ர‌ப்பிட‌ம் சுக‌ம் அனுப‌விப்பார்க‌ள். பின்ன‌ர் கொஞ்ச‌ம் கூட‌ விவ‌ஸ்தை இன்றி ஓடி விடுவார்க‌ள்.

எப்ப‌டித்தான் பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ இந்த‌ இரு க‌ட்சிக‌ளுக்கும் அள்ளி கொட்டினாலும் அவ்வள‌வையும் அனுப‌வித்து விட்டு மீண்டும் அடுத்த‌ பக்க‌ம் பாய்ந்து விட்டு இது த‌ம‌து சாண‌க்கிய‌ம் என‌ பேசும் ம‌ன‌தைக்கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ அந்த‌ ம‌ன‌ப்பாங்கு ச‌ரி என‌ பாராட்டும் ஆத‌ர‌வாள‌ர்க‌ளைக்கொண்ட‌ க‌ட்சிக‌ளாகும்.

அர‌சிய‌லில் ஒருவ‌னை ஏமாற்றுவ‌து, அவ‌னோடு அனுப‌வித்து குழிவெட்டுவ‌து, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌, முனாபிக் வேலை செய்வ‌து எல்லாம் ந‌ல்ல‌ செய‌ல் என்று உள்ள‌த்தால் கூறும் வாக்காள‌ர்க‌ளை கொண்ட‌ க‌ட்சிக‌ள்தான் முஸ்லிம் காங்கிர‌ஸ், ம‌க்க‌ள் காங்கிர‌ஸ்.

இந்த‌க்க‌ட்சிக‌ளை ந‌ம்பினால் நிச்ச‌ய‌ம் ப‌டுகுழியில் வீழ்வீர்க‌ள் என்ப‌தை ப‌ல‌ கால‌மாக‌ நாம் ராஜ‌ப‌க்ஷ‌ த‌ர‌ப்புக்கு சொல்லி வ‌ந்துள்ளோம்.

2018ம் ஆண்டு எம‌து க‌ட்சியின‌ர், ம‌ஹிந்த‌, பெசிலை ச‌ந்தித்த‌ போது, எம‌து க‌ட்சியின் ஆத‌ர‌வை அவ‌ர்க‌ள் எம்மிட‌ம் கேட்ட‌ போது நாம் சொன்ன‌து இதுதான்:

இப்போது அவ‌ர்க‌ள் ம‌றுப‌க்க‌ம் இருப்ப‌தாலும் பிர‌ப‌ல்ய‌மான‌ எந்த‌ முஸ்லிம் க‌ட்சியும் உங்க‌ள் ப‌க்க‌ம் இல்லாத‌தாலும் எம்மை அழைக்கிறீர்க‌ள்.

நாங்க‌ள் பெரு வாக்குக‌ள் கொண்ட‌ க‌ட்சிய‌ல்ல‌. ஆனாலும் உண்மையான‌வ‌ர்க‌ள் என்ப‌தால் நாம் இருக்கும் ப‌க்க‌ம் பெரும்பாலும்  இறைவ‌ன் வெற்றியைத்த‌ருவான் என்ப‌தை க‌ண்ட‌வ‌ர்க‌ள். அவ்வாறு நாம் க‌ள‌த்தில் இற‌ங்கி செய‌ல்ப‌ட்டு நீங்க‌ள் வென்ற‌தும் முஸ்லிம் திருட்டு க‌ட்சிக‌ள் ஹெலிகொப்ட‌ரில் வ‌ந்து எம‌க்கு முன் உங்க‌ள் வாச‌லில் இற‌ங்குவார்க‌ள். அப்போது எம்மை ம‌ற‌ந்து விடுவீர்க‌ள் என‌ சொன்னோம்.

இல்லை, இனி அப்ப‌டி ந‌ட‌க்காது என்று இருவ‌ரும் சொன்னார்க‌ள். நாம் சொன்ன‌து போன்றே இப்போது அந்த‌க்கூட்ட‌ம் ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு வாச‌லில் ப‌டுக்கிற‌து. மீண்டும் அவ‌ர்க‌ள் அனுப‌வித்து விட்டு தேர்த‌ல் வ‌ந்த‌தும் நிச்ச‌ய‌ம் ஓடுவார்க‌ள்.

ஆக‌வே ம‌ஹிந்த‌ த‌ர‌ப்புக்கு எப்போதும் விசுவாச‌மாக‌ இருக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ளை ப‌ல‌ப்ப‌டுத்த‌ பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ முன் வ‌ர‌வேண்டும். ந‌ரியை ம‌டியில் வைத்து உண‌வ‌ளிப்ப‌தை விட‌ ஆட்டுக்குட்டிக்கு உத‌வி செய்வ‌தே சிங்க‌த்துக்கு அழ‌கு.

ஏ.பி.எம்.அஸ்ஹர் 

3 கருத்துரைகள்:

அண்ணே சிங்களபேரினவாத கட்சிகளுக்கு ஏப்புட்டு விசுவாசமெக்கிறது முக்கியமில்லை ,ஏப்புட்டு வாக்குண்டு எண்டதுதான் முக்கியமண்ணா..இதுகூட தெரியாம இன்னும் கொளந்தப்புள்ளவகவே இரிகிரிக்கண்ண ..ஐயோ ஐயோ.

ஆனால் நேர்மையான உண்மை இதுதான், Insha Allah.
பாராளுமன்றத்திற்கு பசில் வருகை அரசியலின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது. சமூக பொருளாதார, வேளாண் வளர்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் பின்பற்றப்படும்.

"முஸ்லீம் குரல்" எப்போதும் பசிலால் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறது, இன்ஷா அல்லாஹ்.

"முஸ்லீம் குரல்" எப்போதும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துல்லது, இன்ஷா அல்லாஹ்.

"முசிம் குரல்" பல ஆண்டுகளாக அரசியலில் பசிலுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியதால், அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கு பசிலை விட அரசாங்கத்தில் ஒரு சிறந்த நண்பர் இருக்க முடியாது. முஸ்லிம்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பசிலுடன் இணைந்து பணியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைக்கும் இந்த சிறந்த வாய்ப்பைகுறிப்பாக இளைய தலைமுறை முஸ்லிம்கள் இழக்கக்கூடாது.
2024 ஆம் ஆண்டில் கோதபய ராஜபக்ஷ போட்டியிடவில்லை என்றால், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஆவதற்கு சர்வவல்லமையுள்ள அல்லாஹ், பசிலுக்கு ஆசீர்வதித்திருக்கலாம், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

இந்த முஸ்லீம் கட்சிகள் மஹிந்த தரப்பினரை பயன்படுத்தி நன்கு சுகம் அனுபவிப்பார்கள் .ஆனால் முஸ்லீம் சமூகத்தை அனுபவிக்க விடமாட்டார்கள் .

Post a Comment