July 15, 2021

இலவச கல்விக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் SJB ஆதரிக்காது, இலவச கல்வியைப் பாதுகாக்க உறுதியாக முன்நிற்போம் - சஜித்


உத்தேச கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழக சட்டம் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  சங்கத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கலந்துரையாடல் இன்று(15) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தொடர்புடைய சட்டமூலம் மற்றும் அது ஏற்படுத்தும் ஆபத்துகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இலவச கல்விக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்க மாட்டாது என்றும், இலவச கல்வியைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக முன் நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


0 கருத்துரைகள்:

Post a Comment