Header Ads



எனது மகளின் மரண பரிசோதனையை முஸ்லிம் வைத்தியர், செய்த நிலையில் அதில் எனக்கு சந்தேகம் உள்ளது - ஹிஷாலினியின் தாய்


தனது மகளின் மரண பரிசோதனை முஸ்லிம் வைத்தியரொருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தனக்கு அதில் சந்தேகம் உள்ளதாக ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீயில் எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து அவரது பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஹிஷாலினியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், என்னுடைய மகளுக்கு நிறைய அநியாயங்கள் நடந்துள்ளன.

என் மகளை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்துள்ளனர் மின்விசிறி இல்லாமல், உணவு இல்லாமல். சரியான சித்திரவதை செய்துள்ளனர்

என்னுடைய மகள் இவற்றையெல்லாம் மறைத்து எனக்கு வேலை செய்ய முடியாது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என கூறினார்.

இப்பொழுது தேடிப்பார்க்கும் போது எனது பிள்ளைக்கு சரியான அநியாயம் செய்துள்ளார்கள்.

எனது மகளின் மரண பரிசோதனையில் எனக்கு சந்தேகம் உள்ளது. அதை செய்துள்ளது முஸ்லிம் வைத்தியர். எனவே மீள மரண பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

6 comments:

  1. புரிகிறது இதன் பின்னாலிருக்கும் அரசியல். தோட்டகாட்டான் 😂

    ReplyDelete
  2. சொல்லி கொடுத்ததை சொல்லுமாம் கிளிப்பிள்ளை. திருடர்கள் திருடிவிட்டு பொருள்களை பொருள் தொந்தகாரனுடன் தேர்ந்து தேடுவது போலுல்லது.திருடன் மிகவும் கிட்டவே இருக்கின்டான்.

    ReplyDelete
  3. டாக்டர் சாபியா?.

    ReplyDelete
  4. உண்மைதான். ஏனெனில் ஹிஷாலினியின் அம்மா MBBS மற்றும் MD, MRCP போன்ற இன்னோரன்ன பரீட்சைகளில் சித்தியடைந்து தற்போது வீட்டில் இருக்கும் ஒரு பெண்.

    ReplyDelete
  5. அந்த சிறுமியை படிக்க வேண்டிய வயதில் படிக்க விடாமல் வேளைக்கு அனுப்பிய குற்றத்திற்காக அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு முதலில் தண்டனை வழங்க வேண்டும்
    அப்போது தான் மற்றவர்களும் இப்படியான குற்றங்களை செய்யமாட்டார்கள்.

    ReplyDelete
  6. ​தோட்டகாட்டான் துவேசம் வீணாப்போன அரசியலும் சரியாக ஒத்துப் போகின்றது.இத்தகைய அபாண்ட குற்றம் சாட்டும் நபர்களை குற்றச்சாட்டு பொய்யென ஒப்புவிக்கப்பட்டால் நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.