Header Ads



கொரோனா தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 7 சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது - உயர் நீதிமன்றம்

 


COVID-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தின் ஏழு சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த சரத்துக்களை திருத்தமின்றி நிறைவேற்றுவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

COVID-19 உடன் தொடர்புடைய நிலைமைகளால் மாற்று நீதிமன்றங்களை நிறுவுவது, தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது, உடன்படிக்கைகளில் இணக்கம் காணப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமற்போன சில தரப்பினருக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்குவது உள்ளிட்ட சில ஏற்பாடுகளை வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.

No comments

Powered by Blogger.