Header Ads



கொரோனாவால் பாதிக்கப்பட்ட 500 குழந்தைகள், கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வேயில் இதுவரை சிகிச்சை


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குழந்தைகள், கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் இருந்து இதுவரை பதிவாகியுள்ளனர் என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பத்து குழந்தைகள் குறித்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளில் இதய நோய் அதிகரித்து வருவதாகவும், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில்  தினமும் 5 முதல் 10 குழந்தைகள் வரை கொரோனா இருப்பது கண்டறியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், குழுவில் பல குழந்தைகள் கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.