Header Ads



இலங்கையின் கிபிர் விமானங்களை புதுப்பிக்க இஸ்ரேல் 50 மில்லியன் டொலர் இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டது


இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களை புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, விமானங்களின் கட்டமைப்பு புதுப்பிக்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கு புதிய ரேடார், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் மறைப்புகள் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தவிர, இலங்கை விமானப் படை உறுப்பினர்களுக்கு இந்த புதுப்பித்தல் தொடர்பிலான நிபுணத்துவ பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

1 comment:

  1. தொழில்நுட்பத்தைச் சரியாக விளங்கிய துறைபோன தேர்ச்சியாளர்கள் அல்லாது அரசியலை முற்படுத்தி இஸ்ரவேலுடன் இத்தகைய உடன்பாட்டுக்கு வருவது மிகப் பெரிய அறிவீனமும் முட்டாள்தனமுமாகும். அதற்கு இதற்கு முன்னுள்ள அனுபவங்கள் மிகச்ச சிறந்த முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.பிரேமதாஸா ஆட்சி காலத்தில் எமது இராணுவப்படைக்கு பயிற்சி கொடுப்பதாக பாசாங்கு செய்து கொண்டு பெருமளவு பணம் எடுத்துக் கொண்டு புலிப்படைக்கு பயிற்சி கொடுத்த அதேநேரம் இலங்கைக்கு அதிசிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த ஹெலிகெப்டர்களை வழங்குவதாகக் கூறி பாரிய சலவை இயந்திரங்களை இலங்கை இராணுவத்துக்குக் காண்பித்து இலங்கையை இராணுவ அதிகாரிகளை எருமைமாடுகளாக கருதிச் செயற்பட்ட அதே இஸ்ரவேல்தான் தற்போது இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி கொடுக்க முன்வந்திருக்கின்றது. இது பற்றி போதிய முன் அனுபவமில்லாத அதிகாரிகள் இஸ்ரவேல் சென்றால் அதைவிட எருமைத்தனமான பயிற்சிகளை வழங்கி பொது மக்களின் பணத்தை விழுங்கி இலங்கையை எதிர்காலத்தில் முழுமையாக கைப்பற்றும் சூழ்ச்சிகளுக்கு அத்திவாரம் இடும் சூழ்ச்சிகளையும் கச்சிதமாகச் செய்யக்கூடிய பேராசைப்பித்தன்தான் இஸ்ரவேல் என்பதை இந்த நாட்டின் அரசியல் தலைமைகள் எப்போது விளங்கிக் கொள்ளும் என்பது தான் கேள்விக்குறி.

    ReplyDelete

Powered by Blogger.